அடுத்த வாரம் வெளியாகும் ரெட்மி நோட் 9... சிறப்பம்சங்கள் என்னென்ன?

Note 9 Pro Max அரோரா ப்ளூ, க்ளாசியர் வைய்ட் மற்றும் இன்டெர்ஸ்டெல்லர் ப்ளாக் ஆகிய நிறங்களில் வெளியாகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Note 9 Pro Max அரோரா ப்ளூ, க்ளாசியர் வைய்ட் மற்றும் இன்டெர்ஸ்டெல்லர் ப்ளாக் ஆகிய நிறங்களில் வெளியாகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Redmi Note 9 launching next week specifications price availability

Redmi Note 9 launching next week specifications price availability

Redmi Note 9 launching next week specifications price availability and more  : ரெட்மி அடுத்த வாரம் தங்களின் நோட் சீரியஸில் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிடும் திட்டத்தில் உள்ளது. இதுவரை வெளியாகியுள்ள வதந்திகளின் அடிப்படையில் சியோமியின் ரெட்மி நோட் 9-ன் ப்ரோ மாடல் நோட் 9 ப்ரோ மேக்ஸ் என்று அழைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

ஆன்லைன் லாஞ்ச்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஒரு மாபெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியிருப்பதால் இந்த ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் லாஞ்ச் ஈவண்ட் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஆன்லைனில் இந்த ஸ்மார்ட்போனின் லாஞ்ச் அறிவிக்கப்பட்டுள்ளாது. மார்ச் 12ம் தேதி வெளியாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய முழுமையான தகவல்களை நீங்கள் சியோமியின் சமூக வலைதள பக்கங்களிலும், இணையங்களிலும், யூடியூப் சேனல்களிலும் பார்த்துக் கொள்ளலாம்.

Advertisment
Advertisements

ரெட்மி நோட் 9 குறித்து இதுவரை நாம் அறிந்து கொண்ட விசயங்கள் என்னென்ன என்று பார்த்தால் இந்த போனின் பின்பக்கத்தில் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ரெட்மி வழங்கும் முதல் ஸ்கொயர் கேமரா இதுவாகும்.

கேமர்களுக்கு விருப்பமான ஸ்மார்ட்போனாக இது வெளியாகும் என்பதில் துளியும் சந்தேகமில்லை என்று பலரும் தங்களின் எதிர்பார்ப்பினை கூறியுள்ளனர். 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்தது இதற்கு முன்பு வெளியான ஸ்மார்ட்போன். இதனைவிட வேகமாக சார்ஜாகும் தொழில்நுட்பத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறாது. Note 9 Pro Max அரோரா ப்ளூ, க்ளாசியர் வைய்ட் மற்றும் இன்டெர்ஸ்டெல்லர் ப்ளாக் ஆகிய நிறங்களில் வெளியாகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"

விலை எவ்வளவாக இருக்கும்?

பொதுவாக ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 10 ஆயிரமாக இருக்கும். ப்ரோ மாடல்களின் விலை ரூ. 15 ஆயிரம் வரை செல்லும். இதே ஃபார்முலா தான் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன்களுக்கும் பொருந்தும்.

Redmi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: