Redmi Note 9 News In Tamil: சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்திய ரெட்மீ நோட் வகை ஸ்மார்ட்போன்கள், கடந்தாண்டு சக்கைபோடு போட்டது யாராலும் மறுக்க முடியாது. அந்நிறுவனம், தற்போது, பல நாடுகளில் அறிமுகம் செய்தபிறகு, இந்தியாவில், கடந்த ஜூலை 20ம் தேதி ரெட்மீ நோட் 9 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. 2019ம் ஆண்டுவரை, ஆண்டின் முற்பகுதியிலேயே புதிய போன்களை அறிமுகம் செய்து வந்த சியோமி, இந்தாண்டு மிக தாமதமாக அறிமுகம் செய்துள்ளதன் மூலம், அது தன்னுடைய வழக்கமான நடைமுறைகளை மாற்றியுள்ளது என்றே கருத வேண்டியுள்ளது.
இந்தியாவில் ரெட்மீ 8 மற்றும் நோட் 8 புரோ அறிமுகப்படுத்தியபோது கிடைத்த வரவேற்பே, ரெட்மீ 9 புரோ மற்றும் நோட் 9 புரோ மேக்ஸ் அறிமுகப்படுத்திய நிலையிலும் கிடைத்துள்ளது. இந்தியாவில் தங்கள் நிறுவன தயாரிப்புகள் மீது மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் உள்ளதே இது காட்டுகிறது. புதிய போன்களில் மேலும் பல சிறப்பம்சங்களை புகுத்தி இந்திய மக்களை மகிழ்விக்க திட்டமிட்டுள்ளோம்.
ரெட்மீ நோட் 8 உடன் ரெட்மீ 9 ஒப்பிடுகையில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட வசதிகள் இருப்பினும், சில குறைகளும் இதில் இல்லாமல் இல்லை.
ரெட்மீ 8 ஸ்மார்ட்போனில் உள்ளதைவிட ரெட்மீ 9 ஸ்மார்ட்போனில், சிறந்த அப்கிரேடுகள் அதிகம் உள்ளன.
ரெட்மீ 8 மற்றும் 9 ஒப்பீடு
ரெட்மீ நோட் 9வை ஒப்பிடும்போது ரெட்மீ நோட் 8 ஸ்மார்ட்போனில் அதிக பிரிமீயத்துடன் கூடிய பிளாஸ்டிக் பின்புறப்பகுதி மற்றும் பிரேம் சிறப்பாக உள்ளது. சியோமி நிறுவனத்தின் ரெட்மீ நோட் 7ல் தான் முதன்முறையாக கண்ணாடியிலான பின்பக்கபகுதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அந்தநேரத்தில் முன்பக்க பிளாஸ்டிக் பேனல் அகற்றப்பட்டு அப்போது வெளியான அனைத்து ஸ்மார்ட்போன்களின் பின்புறம் கண்ணாடியிலானேலேயே உருவாக்கப்பட்டிருந்தது.
டிசைனுடன் ஒப்பிடும்போது ரெட்மீ நோட் 9 மற்றும் ரெட்மீ நோட் 9 புரோ இரண்டும் ஒரேமாதிரி சதுர வடிவிலான கேமரா டிசைனாக உள்ளது. ரூ.10 ஆயிரம் அளவிலான பட்ஜெட்டில், டிஸ்பிளேயில் பிங்கர் பிரின்ட் சென்சார் வசதியை சியோமி தான் முதலில் அறிமுகப்படுத்தியிருந்தது. ரெட்மீ நோட் 8ல் இருந்த இந்த சிறப்பம்சம் ரெட்மீ நோட் 9ல் இல்லை.
கேமரா மட்டுமே, ரெட்மீ நோட் 8 மற்றும் 9ல் ஒரேமாதிரியாக அமைந்துள்ளது. இவ்விரு போன்களிலும், 48எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த். முன்பக்க கேமராவிலும் எவ்வித புது அப்டேட்டும் இல்லை. இரண்டு போன்களிலும், 13 எம்பி செல்பி கேமரா உள்ளது. ஒரே ஒரு வித்தியாசம் யாதெனில், ரெட்மீ 8ல் வாட்டர்டிராப் நாட்ச் இருந்தது. ரெட்மீ 9ல் பஞ்ச் ஹோல் வசதி உள்ளது.
மேம்படுத்தப்பட்ட வசதிகள்
ரெட்மீ 8 உடன் ஒப்பிடும்போது ரெட்மீ 9ல் பெரிய திரை உள்ளது. திறன்மிகு புராசசர், விரைவில் சார்ஜ் ஏறும் வகையிலான பெரிய பேட்டரி, ரெட்மீ 8ல் 6.3 இஞ்ச் நாட்ச் டிஸ்பிளே இருந்த நிலையில், ரெட்மீ 9ல், 6.55 இஞ்ச் டாட் டிஸ்பிளே உள்ளது.
ரெட்மீ 8 ல் குவால்காம் ஸ்நாப்டிராகன் 665 புராசசர் இருந்த நிலையில், ரெட்மீ 9ல் மீடியாடெக் புராசசர் உள்ளதாகவும், பப்ஜி விளையாட்டு பிரியர்களுக்கு ரெட்மீ 9 மிகச்சிறந்த அனுபவத்தை தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெட்மீ 8 ல் 18 வாட்ஸ் வேகமாக சார்ஜ் ஏறும் வகையிலான 4000 மெகாஹெர்ட்ஸ் பேட்டரி இருந்த நிலையில், ரெட்மீ 9ல், 22.5 வாட்ஸ் மிக வேகமாக சார்ஜ் ஏறும் வகையிலான 5020 மெகாஹெர்ட்ஸ் திறன் பேட்டரி உள்ளது.
விலை கொஞ்சம் அதிகம் தான்
சியோமி நிறுவனம், தங்களது ரெட்மீ நோட் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியபோது அதன் விலை ரூ.9,999 என்ற அளவில் இருந்தது. இந்தியாவில் ஜிஎஸ்டி வரி உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், விலை ரூ. 11,999 ஆக அதிகரித்தது. இந்நிலையில், ரெட்மீ 9 ஸ்மார்ட்போனின் விலை, ஜிஎஸ்டி வரிகளை சேர்த்து ரூ. 12,999 என்ற விலையிலிருந்து துவங்குவதாக சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.