ரூ.10,000 விலையில் அசத்தலான அம்சங்களுடன் சிறந்த ஸ்மார்ட்போன்கள்

Budget Mobiles under Rs 10000 ரெட்மி 9 ப்ரைம்-ல் 4 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. மேலும், 4 ஜிபி / 128 ஜிபி மாறுபாட்டின் விலை ரூ.10,999.

Redmi Realme Poco Samsung Budget Mobiles under Rs 10000 Tamil News
Redmi Realme Poco Samsung Budget Mobiles under Rs 10000 Tamil News

Budget Mobiles under Rs 10,000 Tamil News : பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிக சக்திவாய்ந்ததாகி வருகிறது. ஒவ்வொரு புதிய தலைமுறை மலிவு பட்ஜெட் சார்ந்த ஸ்மார்ட்போன்களிலும், சிறந்த ப்ராசசர், கேமராக்கள் மற்றும் அதிக பேட்டரி ஆயுள் உள்ளன. அந்த புதிய விவரக்குறிப்புகளை மனதில் வைத்து, இந்தியாவில் நீங்கள் இப்போது ரூ.10,000 விலையில் வாங்கக்கூடிய சிறந்த பட்ஜெட் தொலைபேசிகளின் பட்டியலை பார்க்கலாம்.

ரெட்மி 9 ப்ரைம்

ரெட்மி 9 ப்ரைம், பல சம்சங்கள் நிரம்பிய அமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் அடிப்படை மாறுபாட்டின் விலை ரூ.9,999 மட்டுமே. இந்த போனில் 6.53 இன்ச், எஃப்.எச்.டி + ஐ.பி.எஸ் எல்.சி.டி திரை உள்ளது. இது மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 4 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. மேலும், 4 ஜிபி / 128 ஜிபி மாறுபாட்டின் விலை ரூ.10,999.

Budget Mobiles under Rs 10000 Tamil News
Redmi 9 Prime can be purchased starting at Rs 9,999

கேமரா ஒளியியலைப் பொறுத்தவரை, 13MP பிரதான கேமரா சென்சார், 8MP அல்ட்ரா-வைட் சென்சார், 5MP மேக்ரோ சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சார் உள்ளது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8 எம்பி கேமரா உள்ளது. தொலைபேசியில் 5,020 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், இனஃப்ராரெட் போர்ட், 3.5 மிமீ போர்ட் மற்றும் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆகியவை அடங்கும்.

போக்கோ எம்2

போக்கோ எம் 2 இப்போது மிகவும் மலிவு விலையில் கிடைக்கிறது. ரூ.9,999 விலைக்கு ஒட்டுமொத்த தொகுப்பைக் கொண்டுள்ளது. 6.53 இன்ச், எஃப்.எச்.டி + ஐ.பி.எஸ் எல்.சி.டி ஸ்க்ரீன், 400 நிட்ஸ் உச்ச பிரகாசத்துடன் உள்ளது. இந்த தொலைபேசி மீடியா டெக் ஹீலியோ ஜி 80 சிப்செட் மற்றும் 6 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. அதன் உயர்நிலை மாடலான 128 ஜிபி சேமிப்பு மாறுபாடு ரூ.10,999 விலையில் கிடைக்கும்.

Redmi Realme Poco Samsung Budget Mobiles under Rs 10000 Tamil News
Poco M2 can be purchased starting at Rs 9,999
கேமராவைப் பொறுத்தவரை, 13MP பிரதான கேமரா, 8MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 5MP மேக்ரோ மற்றும் 2MP டெப்த் சென்சார் கேமராக்கள் உள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8 எம்பி முன் கேமரா உள்ளது. தொலைபேசியில் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஹெட்போன் போர்ட் மற்றும் ஐஆர் பிளாஸ்டர் ஆகியவை உள்ளன. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000 எம்ஏஎச் பேட்டரியும் உள்ளது.

ரியல்மி நர்சோ 20ஏ

ரியல்மி நர்சோ என்பது பட்ஜெட் கேமிங் சார்ந்த சாதனம். இது ரூ.8,499 முதல் தொடங்குகிறது. இந்த தொலைபேசி 6.5 இன்ச் எச்டி + ஸ்கிரீனில் 480 நிட்ஸ் உச்ச பிரகாசத்தைக் கொண்டுள்ளது. மேலும், குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் நீங்கள் பெறும் மாறுபாட்டின் அடிப்படையில் 3/4 ஜிபி RAM உள்ளது. 4 ஜிபி / 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.9,499. ஆனால், 3 ஜிபி / 32 ஜிபி வேரியண்ட்டை ரூ.8,499 முதல் வாங்கலாம்.

Redmi Realme Poco Samsung Budget Mobiles under Rs 10000 Tamil News
Realme Narzo 20A starts at Rs 8,499

இந்தத் தொலைபேசியில் 2MP டெப்த் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் கொண்ட 12MP பிரதான கேமரா சென்சார் உள்ளது. இந்த அமைப்பு 30fps-ல் 4K வீடியோ வரை பதிவுசெய்யும் திறன் கொண்டது. முன்பக்கத்தில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 8 எம்பி கேமரா உள்ளது. மேலும்,10W சார்ஜிங் கொண்ட 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட், 3.5 மிமீ ஹெட்போன் போர்ட் மற்றும் புளூடூத் 4.2 இணைப்பு ஆகியவை அடங்கும்.

சாம்சங் கேலக்ஸி எம்02s

சாம்சங் சமீபத்தில் அறிமுகப்படுத்திய கேலக்ஸி எம்02s, தற்போது 3 ஜிபி / 32 ஜிபி வேரியண்டிற்கு ரூ.8,999 ஆகவும், 4 ஜிபி / 64 ஜிபி வேரியண்டிற்கு ரூ.9,999 ஆகவும் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தொலைபேசியில் 6.5 இன்ச் எச்டி + பிஎல்எஸ் ஐபிஎஸ் ஸ்க்ரீன் உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் மற்றும் 3 அல்லது 4 ஜிபி RAM, இந்த யூனிட்டை இயக்குவது. 3 ஜிபி RAM வேரியண்ட்டில் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. 4 ஜிபி RAM வேரியண்ட்டில் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கிறது.

Redmi Realme Poco Samsung Budget Mobiles under Rs 10000 Tamil News
Samsung M02s is priced starting at Rs 8,999

13MP முதன்மை கேமராவுடன் 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சார் இந்த தொலைபேசியில் உள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 5 எம்பி பிரதான கேமரா உள்ளது. தொலைபேசியைத் தொடர 5,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவு உள்ளது. ஆனால், கைரேகை சென்சார் இல்லை. மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட், 3.5 மிமீ போர்ட் மற்றும் இரட்டை சிம் ஆதரவு ஆகியவை உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Redmi realme poco samsung budget mobiles under rs 10000 tamil news

Next Story
டெலிகிராம் பற்றித் தெரியாத ஐந்து சிறப்பு அம்சங்கள்!Telegram five features you should keep in mind Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com