Redmi News In Tamil: ஜூலை 20 ஆம் தேதி இந்தியாவில் Redmi Note 9 அறிமுகப்படுத்தப்படும் என நிறுவனம் டிவிட்டர் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது. அறிமுகமாக உள்ள Redmi Note 9, கடந்த வருடம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro வின் தொடர்ச்சியாக வர உள்ளது. இது Note 9 வரிசையில் புதிய பதிப்பு.
ஒரு நிக்ழச்சி ஏற்பாடு செய்து இதை அறிமுகம் செய்யுமா அல்லது எளிமையாக அதன் விலையை மட்டும் சொல்லுமா என்று Xiaomi இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஏனென்றால் உலகளவில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கைபேசியின் விவரக்குறிப்புகள் நாம் ஏற்கனவே அறிந்ததுதான். Redmi Note 9 உலகளவில் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது.
ஜீலை 20 ஆம் தேதி இது தொடர்பான அறிவிப்பு சரியாக 12pm IST மணிக்கு வெளியிடப்படும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது. Note 9 Pro series ஐ அறிமுகப்படுத்தப்படும் போதே Note 9 விரைவில் அறிமுகமாகும் என Xiaomi தெரிவித்திருந்தது ஆனால் உலகளாவிய தொற்று காரணமாக இதன் அறிமுகம் தள்ளி போயிருக்கலாம்.
Redmi Note 9 Price Features: ரெட்மி நோட் 9 மொபைல் போன் விலை, வசதிகள்
Redmi’s Note numeric series விலை வழக்கமாக ரூபாய் 10,000/- க்கு கீழ் இருக்கும். சமீபத்தில் உயர்த்தப்பட்ட GST வரவிருக்கும் Redmi Note 9 விலையை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால் இது எதிர்பார்த்ததை விட சற்று விலை கூடுதலாக இருக்கும். Xiaomi வரவிருக்கும் ஸ்மார்ட் கைபேசியின் விலையை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
நிறுவனம் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு Note series ஐ அறிமுகப்படுத்தும் - ஒன்று ஆண்டின் தொடக்கத்தில், இரண்டாவது ஆண்டின் இறுதியில். இரண்டாவது Note series வழக்கமாக தீபாவளிக்கு முன்பு அதாவது நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும்.
உலக சந்தையில் Redmi Note 9 ஏற்கனவே $199 விலையில் தோராயமாக ரூபாய் 14,900/- என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கைபேசி இரண்டு வகைகளாக அதாவது 3GB RAM + 64GB சேமிப்பு மற்றும் 4GB RAM + 128GB சேமிப்பு வசதியுடன் வருகிறது. மேலும் Redmi Note 9 கைபேசியில் 6.53-inch full-HD+ IPS டிஸ்ப்ளே, octa-core MediaTek Helio G85 processor, quad rear கேமரா setup, 5,020mAh பேட்டரி, 18W விரைவாக சார்ஜாகும் திறன், மற்றும் Android 10-based MIUI 11 உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.