ஸ்மார்ட்போன் சார்ஜிங் தொழில்நுட்பம் தற்போது நிறுவனங்களிடையே போட்டியாக உள்ளது. சமீபத்தில், Realme நிறுவனம் 4,600mAh பேட்டரி கொண்ட போன்னை 240W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்து ஒன்பதரை நிமிடங்களில் முழு சார்ஜ் செய்து ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில் Realme-யின் நேரடி போட்டியாளரான Xiaomi அதன் துணை பிராண்டான Redmi போனுக்கு இதே போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது. ரியல்மிக்கு ஒரு படி மேலாக 300W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வெறும் 5 நிமிடத்தில் போனை முழு சார்ஜ் செய்து வீடியோ வெளியிட்டது. 4,100mAh பேட்டரி கொண்ட போனில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது.
சீன சமூக ஊடக தளமான வெய்போவில் ரெட்மி சார்ஜிங் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. 300W சார்ஜிங் தொழில்நுட்பத்தை காட்ட 4,100mAh பேட்டரியுடன் கூடிய Redmi Note 12 Discovery Edition ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்பட்டது.
ஒரிஜினல் நோட் 12 டிஸ்கவரி போன் 4,300mAh பேட்டரி கொண்டது. இந்தச் சோதனைக்காக ஃபோன் மாற்றியமைக்கப்பட்டது.
மாற்றியமைக்கப்பட்ட ரெட்மி நோட் 12 டிஸ்கவரி எடிஷன் சுமார் 3 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜூம் , 5 நிமிடங்களில் முழு சார்ஜூம் செய்யப்பட்டு விட்டது. சார்ஜிங் வேகம் 290.6W ஆக உயர்ந்தது.
Redmi இதை 300W இம்மார்டல் செகண்ட் சார்ஜர் என்று அழைக்கிறது, இது ஏற்கனவே சில Xiaomi மற்றும் Redmi ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் 120W ஹைப்பர்சார்ஜ் தொழில்நுட்பத்தில் இருந்து வேறுபட்டதாக கூறுகிறது. இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் சந்தையில் அறிமுகப்படுத்தப்படுமா என்பது குறித்து தகவல் இல்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/