கடந்த டிசம்பர் 3ம் தேதி ஏர்டெல், வோடபோன் ஆகிய இரு நிறுவனங்கள் தங்கள் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது. அந்த திட்டத்தில் இருந்து, மற்ற நெட்வொர்க்கிற்கான அவுட்கோயிங் கால்கள் குறித்த வரம்பைத் தளர்த்தியுள்ளதாக கடந்த டிசம்பர் 6ம் தேதி அறிவித்தது. டிசம்பர் 6ம் தேதி ஜியோ தனது புதிய கட்டணத்தை வாடிக்கையாளர்களுக்கு நடைமுறைபடுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இரு நிறுவனங்களும் முன்னதாக, தங்கள் 28 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தில், மற்ற ஆபரேட்டர்களுக்கு செல்லும் அவுட்கோயிங் கால்களுக்கு 1,000 நிமிடங்கள் மட்டும் வரை இலவசமாய் கொடுத்தது. மேலும், 84 நாட்கள் வேலிடிட்டியில் 3,000 நிமிடங்கள் வரையிலும், 365 நாட்கள் வேலிடிட்டி ப்ளானில் 12,000 நிமிடங்கள் வரை இலவசமாய் பேச அனுமதித்தினர்.இந்த வரம்பைத் தாண்டி, அவுட்கோயிங் கால்களுக்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தன.
எவ்வாறாயினும், ரிலையன்ஸ் ஜியோ தனது திட்டங்களின் கீழ் உள்ள இலவச அழைப்பு வரம்பு சாதாரண பயன்பாட்டை விட ஐந்து மடங்கு அதிகம் என்றும், அதன் மொபைல் சேவை போட்டியாளர்களை விட கட்டண சேவையில் 25 சதவீதம் குறைவாக இருப்பதாகவும் கூறியுள்ளது.
பாரதி ஏர்டெல், தனது ட்வீட்டில், “நாங்கள் உங்களைக் கேட்டோம்! நாங்கள் மாற்றத்தை செய்கிறோம். நாளை முதல், இந்தியாவில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற அழைப்பை அனுபவிக்கலாம். எந்த நிபந்தனைகளும் உங்களுக்கு கிடையாது.” பதிவு செய்துள்ளது.
We heard you! And we are making the change.
From tomorrow, enjoy unlimited calling to any network in India with all our unlimited plans.
No conditions apply. pic.twitter.com/k0CueSx0LV
— airtel India (@airtelindia) December 6, 2019
வோடபோனும் தனது ட்விட்டர் பக்கத்தில்" இலவசத்திற்கு இலவசம் என்று தான் பொருள்" என்று ரிலையன்ஸ் ஜியோவை கவுண்ட்டர் கொடுக்கும் வகையில் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளது.
Enjoy free unlimited calls to everyone. More reasons for you to rejoice for being on your favourite network. pic.twitter.com/nqcqK8e00z
— Vodafone (@VodafoneIN) December 6, 2019
முகேஷ் அம்பானி தலைமையிலான நிறுவனம் போட்டியாளர்களை விட 15-25 சதவீதம் மலிவான சில திட்டங்களை கடந்த டிசம்பர் 6ம் தேதி அறிவித்தது. இருப்பினும், சனிக்கிழமை மாலை வரை பிற நெட்வொர்க்குகளுக்கு இலவச அழைப்பு வரம்பில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
ரிலையன்ஸ் ஜியோ செய்தித் தொடர்பாளர் தொடர்பு கொண்டபோது, " “ஜியோவின் 'ஆல் இன் ஒன் பேக்கேஜ்களில் ' ஆஃப் நெட் அழைப்புகளுக்கான வரம்பு, சராசரி வாடிக்கையாளர் பயன்படுத்துவதை விட ஐந்து மடங்கு அதிகமாகும் (தரவுகளின் அடிப்படையில்) . இதனால், பொதுவாக எந்த ஜியோ வாடிக்கையாளர் மற்ற நெட்வொர்கை அழைக்கும்போது கட்டணம் செலுத்த தேவையில்லை, மற்ற ஆபரேட்டர்களின் ஒப்பிடத்தக்க திட்டங்களை விட ஜியோ திட்டங்கள் 25 சதவீதம் வரை அதிக மதிப்பை வழங்குகின்றன என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்" என்று கூறினார்.
ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா டிசம்பர் 1 ம் தேதி புதிய திட்டங்களை அறிவித்தன. இதனால் டிசம்பர் 3ம் தேதி முதல் மொபைல் அழைப்பு மற்றும் டேட்டா கட்டணங்கள் முந்தைய கட்டணங்களை விட 50 சதவீதம் வரை அதிகரித்தது.
முன்னதாக, மொபைல் ஆப்ரேட்டர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய அபாராதக் கட்டணத்தை (கணக்கில் காட்டாமல் ஈட்டப்பட்ட வருவாயை மறைத்ததற்காக) உடனடியாக செலுத்த வேண்டும் என்ற உச்ச்சநீதிமன்ற தீர்ப்பால் இரு நிறுவனங்களும் கட்டண உயர்வு நடவடிக்கையை மேற்கொண்டன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.