ஜியோ டிவியின் முக்கிய அறிவிப்பு: 1 வருடத்திற்கு இலவச ஹெச்டி சேனல்கள்!

ரிலையன்ஸ் ஜியோவின் செட்டாப் பாக்ஸ் தொலைக்காட்சி சேவை, வாடிக்கையாளர்களுக்கு 1 வருடன் இலவச சேவையை வழங்குகிறது. பல்வேறு முயற்சிகளில் இறங்கி வரும் ஜியோ நிறுவனம், டெலிகாமிற்கு பிறகு கையில் எடுத்து முக்கிய அம்சம் தான் செட்டாப் பாக்ஸ் சேவை. இந்தியாவில் உள்ள பெரும்பாலான வீடுகளில் தற்போது ஜியோ செட்டாப் பாகாஸ் சேவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ரிலையன்ஸ் பிக் டிவி சந்தாதாரர்களை கவரும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, சந்தாகாரர்களுக்கு ஒரு வருடத்திற்கு தேவையான ஹெச்டி […]

ரிலையன்ஸ் ஜியோவின் செட்டாப் பாக்ஸ் தொலைக்காட்சி சேவை, வாடிக்கையாளர்களுக்கு 1 வருடன் இலவச சேவையை வழங்குகிறது.

பல்வேறு முயற்சிகளில் இறங்கி வரும் ஜியோ நிறுவனம், டெலிகாமிற்கு பிறகு கையில் எடுத்து முக்கிய அம்சம் தான் செட்டாப் பாக்ஸ் சேவை. இந்தியாவில் உள்ள பெரும்பாலான வீடுகளில் தற்போது ஜியோ செட்டாப் பாகாஸ் சேவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ரிலையன்ஸ் பிக் டிவி சந்தாதாரர்களை கவரும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, சந்தாகாரர்களுக்கு ஒரு வருடத்திற்கு தேவையான ஹெச்டி சேனல்களை இலவசமாக வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் முதலில் ரூ.499- கொடுத்து முன்பதிவு செய்ய வேண்டும். பின்பு, செட்டாப் பாக்ஸை பெற்றுக் கொள்ளும் போது, ரூ.1500+250 செலுத்த வேண்டும்.ரிலையன்ஸ் பிக் டிவி செட்டாப் பாக்ஸ் ஏற்கனவே இருக்கும் வீடுகள் அல்லது புதியதாக அமைக்கப்படும் வீடுகள் என அனைவருக்கும் 1 வருடத்திற்கான சந்தா சேவை முற்றிலும் இலவசம்.

1 வருடத்திற்கான இலவச தொலைகாட்சி சேவை முடிந்ததும், அடுத்த இரண்டு மற்றும் மூன்றாவது வருடம் மொத்தம் 24 மாதங்களுக்கு இதே சேவையை தொடர மாதம்தோறும் ரூ.300 ரீசார்ஜ் செய்ய வேண்டும்.  இரண்டு மற்றும் மூன்றாவது வருடம் மொத்தம் 24 மாதங்களுக்கு இதே சேவை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Reliance big tv to offer free hd channels for 1 year heres how to avail the offer

Next Story
ஜிஎஸ்டி எதிரொலி: ஐ-போன் 7, 6எஸ் விலை குறைப்பு; வாங்கலாமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com