ஜியோ ஸ்பியர் (JioSphere) ப்ரௌசர் பயனர்கள், தளத்தில் ஜியோ காயின் சேர்க்கப்பட்டதை கவனித்தனர். Ethereum Layer 2 கிரிப்டோ டோக்கன் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது என கிரிப்டோகரன்சி தளமான பாலிகான் பட்டியலிடப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், ஆண்ட்ராய்டு மற்றும் iOSகளில் ஜியோஸ்பியர் பயன்படுத்தும் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களில் ஜியோ காயின்-ஐ கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.
.
"ஜியோ காயின் என்பது பிளாக்செயின் அடிப்படையிலான ரிவார்ட் டோக்கன்கள், பயனர்கள் தங்கள் இந்திய அடிப்படையிலான மொபைல் எண்களைப் பயன்படுத்தி ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் (JPL) முடிவு செய்த பல்வேறு மொபைல் அல்லது இணைய அடிப்படையிலான பயன்பாடுகளுடன் ஈடுபடுவதன் மூலம் பெற முடியும்." என்று ஜியோ கூறியது.
பல்வேறு ஜியோ செயலிகள் மூலம், பயனர்கள் Web3 டோக்கன்களைப் பெறலாம், அவை அவர்களின் வாலட்களில் டெபாசிட் செய்யப்படும். நாணயத்தின் மதிப்பு பயனர் ஈடுபாட்டைப் பொறுத்தது. MyJio, JioCinema மற்றும் பல செயலிகள் விரைவில் JioCoin-ஐ ஆதரிக்கக்கூடும் என்று தெரிகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/01/19/nfBJPSFGTWrJtBNnGETA.webp)
ஜியோ ஸ்பியர் கூற்றுபடி, ஜியோ ஸ்பியர் ப்ரௌசர் பயன்படுத்துவதன் மூலம் பயனர்கள் ஜியோ காயினை இலவசமாகப் பெறலாம். இந்த நாணயங்களை பாலிகோன் லேப்ஸ் வாலட்டில் சேமித்து வைக்கலாம்.