Reliance industries limited announced JioGigafiber services: ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42வது வருடாந்திர கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வின் அனைத்து சாராம்சங்களும் யூடியூப் வழியாகவும், ஃபேஸ்புக் வழியாகவும் நேரலை செய்யப்பட்டது.
Jio Fiber Welcome offer
மும்பையின் பிர்லா மதுஸ்ரீ சபாகரில் நடைபெற்றது இந்நிகழ்வு. அந்நிறுவனத்தின் தலைவர், நீண்ட நாள் அறிவிப்பில் இருந்த ஜியோவின் ஃபைபர் சர்வீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளாஇ வெளியிட்டார். ஜியோவின் ஜிகாஃபைபர் வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி முதல் லைவாகிறது.
ஒரே கேபிள் கனெக்சனில் அலைபேசி, இணையம், மற்றும் தொலைக்காட்சி கனெக்சன்களை பெற்றிட இயலும். இதற்கான மாதக்கட்டணம் ரூ.700ல் துவங்கி ரூ.10,000 வரை வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர சேவைகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இலவச எல்.இ.டி. டிவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : லெய்க்கா கேமராக்களுடன் மிரட்ட வரும் ஹூவாயின் புதிய ஸ்மார்ட்போன்
இந்த நிகழ்வில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முகேஷ் அம்பானி, சொந்தமாக தொழில் முனைபவர்களுக்கு இலவச நெட் மற்றும் க்ளௌட் கனெக்சன் வழங்க இருப்பதாகவும் அறிவித்தார். இந்த திட்டம் 2020ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
Jio PostPaid Plus sevices
இந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களின் மூலமாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களின் இணையத்தை ஷேர் செய்து கொள்ளலாம். ஒரு குடும்பத்திற்கு ஒரே மாதிரியான ப்ளான்கள், இண்டர்நேசனல் ரோமிங் சேவைகள் அனைத்தும் இதில் வழங்கப்படும். முழுமையான டேரிஃப் விபரங்கள் செப்டம்பர் 5ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் முகேஷ் அம்பானி கூறினார்.