scorecardresearch

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 149 ப்ரீபெய்ட் ப்ளான்… நான் – ஜியோ கால்களுக்கு சூப்பர் சலுகை!

Reliance Jio 149 Revised Prepaid Plan : 4ஜி வேகத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவையும், 100 இலவச எஸ்.எம்.எஸ்களையும் வழங்கி வருகிறது இந்த பேக்.

Reliance JIO Wi-Fi Calling
Reliance JIO video Calling

Reliance Jio 149 Prepaid Plan : ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 149க்கான ப்ரீபெய்ட் ப்ளானில் சிறிய மாற்றங்களை உருவாக்கி அறிவித்துள்ளது. ஜியோ சமீபத்தில் ஐ.யூ.சி எனப்படும் இண்டெர்கனெட்க்ட் யூசேஜ் சார்ஜ் என்ற கட்டணத்தை அறிமுகம் செய்து வைத்தது. ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கினை தவிர இதர நெட்வொர்க்கில் இருக்கும் போன்களுக்கு அழைப்பு விடுத்தால் நிமிடத்திற்கு 6 பைசா கட்டணமாக விதித்து அறிவித்தது.

ஆனால் தற்போது இந்த ப்ரீபெய்ட் பேக்கில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 28 நாட்கள் வேலிடிட்டுக்கு பதிலாக 24 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஜியோவில் இருந்து இதர நெட்வொர்க்கில் பேச 300 இலவச நிமிடங்களை வழங்கியுள்ளது. மேலும் 4ஜி வேகத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவையும், 100 இலவச எஸ்.எம்.எஸ்களையும் வழங்கி வருகிறது இந்த பேக்.

மேலும் படிக்க : ஜியோ வழங்கும் ‘ஆல் இன் ஒன்’ திட்டங்கள் – இவ்வளவு கம்மியாவா!!!

ஏர்டெல் ரூ. 129 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனம் ரூ. 129 ப்ளான் ஒன்றை டெல்லி பகுதியில் அறிமுகம் செய்துள்ளது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பேக்கேஜ் மூலம் மொத்தமாகவே 2ஜிபி டேட்டாவை மட்டுமே பெற இயலும். 300 லோக்கல் மற்றும் எஸ்.டி.டி எஸ்.எம்.எஸ்களையும் அன்லிமிட்டட் கால்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ. 169 ப்ரீபெய்ட் திட்டம்

இந்த திட்டம் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அதோடு அன்லிமிட்டட் கால்களையும் நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்களையும் வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும்.

வோடஃபோன் ப்ரீபெய்ட் திட்டங்கள்

ரூ. 170க்கு குறைவான விலையில் நிறைய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது வோடஃபோன் நிறுவனம். ரூ. 129க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிடிட்டி. 300 இலவச எஸ்.எம்.எஸ்கள் வேலிடிட்டி முடிவதற்குள் அனுப்பிக்கொள்ளலாம். 3ஜி மற்றும் 4ஜி வேகத்தில் 2ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

ரூ. 139 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் 28 நாட்களுக்கு 3ஜிபி டேட்டாவை பெற்றுக் கொள்ளலாம். இலவச எஸ்.எம்.எஸ்கள் ஆகியவற்றையும் அனுப்பிக் கொள்ளலாம்.

ரூ. 169 ப்ரீப்யெட் திட்டம் மூலமாக 1ஜிபி டேட்டாவை நாள் ஒன்றுக்கு பெற்றுக் கொள்ள இயலும். 100 இலவச எஸ்.எம்.எஸ்களை தினமும் அனுப்பிக் கொள்ள இயலும். இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும்.

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Reliance jio 149 prepaid plan reliance jio 149 revised plan offers 1gb data per day

Best of Express