இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உள்ளது. ஜியோ நிறுவனம் தற்போது 5ஜி சேவைகளை வழங்கி வருகிறது. பல்வேறு இடங்களிலும் சேவையை விரிவுபடுத்தி வருகிறது. ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்டு முறையில் ரீசார்ஜ் செய்து பலன்களைப் பெறலாம். பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு திட்டங்களைக் கொண்டுள்ளது.
அந்த வகையில் தினமும் 2.5 ஜி.பி டேட்டா வழங்கும் ஜியோ டாப் ரீசார்ஜ் பிளான்கள்கள் குறித்து இங்கு பார்ப்போம். தினமும் 2.5 ஜி.பி டேட்டா வசதி வெவ்வேறு வேலிடிட்டி திட்டங்களில் வழங்கப்படுகிறது.
ரூ.2999 திட்டம்
ரூ.2999 திட்டம் ஒரு வருடத்திற்கான ப்ரீபெய்ட் திட்டமாகும், இது பல நன்மைகளை வழங்குகிறது. 365 நாட்கள் + 23 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியுடன் வருகிறது. அடிக்கடி ரீசார்ஜ் செய்ய விரும்பாத நபர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமைகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 2.5ஜிபி அதிவேக டேட்டாவையும், கூடுதலாக 75ஜிபி போனஸ் டேட்டாவையும் வழங்குகிறது. பயனர்கள் இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்களையும் பெற முடியும். இந்த திட்டத்தில் JioTV, JioCinema, JioCloud மற்றும் JioSecurity போன்ற கூடுதல் நன்மைகளும் கிடைக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.2023 திட்டம்
ரூ.2023 திட்டமும் நீண்ட நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஒரு ப்ரீபெய்ட் திட்டமாகும். இது 252 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. ஒரு நாளைக்கு 2.5ஜிபி அதிவேக டேட்டாவுடன் அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் வழங்குகிறது. JioTV, JioCinema, JioCloud மற்றும் JioSecurity போன்ற கூடுதல் நன்மைகளையும் பயனர்கள் பெற முடியும்.
ரூ. 899 திட்டம்
ஜியோவின் ரூ.899 திட்டமானது 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இது ஒரு நாளைக்கு 2.5 ஜிபி அதிவேக டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் வழங்குகிறது. JioTV, JioCinema, JioCloud மற்றும் JioSecurity போன்ற கூடுதல் நன்மைகளையும் பயனர்கள் பெற முடியும். 3 மாதங்கள் பயன்படுத்தும் படி இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதே போல் ரூ.349 திட்டமானது தினமும் 2.5 ஜிபி அதிவேக டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் வழங்குகிறது. ஜியோ டி.வி போன்ற கூடுதல் வசதிகள் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். ஜியோவின் அனைத்து திட்டங்களிலும் 5ஜிபி டேட்டாவை வெல்கம் ஆஃபராக இலவசமாக பெற முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“