ஜியோ பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. பொதுவாக 1 மாத ரீசார்ஜ் திட்டம் என்றால் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொண்டதாக இருக்கும். ஆனால் ஜியோவின் ரூ.296 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி உடன் பல்வேறு வசதிகளை வழங்குகிறது. குறிப்பாக மற்ற ரீசார்ஜ் திட்டம் போல் அல்லாமல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா உச்ச வரம்பு கிடையாது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ 296 திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ அதன் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டத்தை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் தினசரி டேட்டா வரம்பு இல்லை. இது மொத்தமாக 25ஜிபி டேட்டாவுடன் வருகிறது. மொத்தமாக 25ஜிபி என்பதால் தினமும் 1 ஜிபி என்ற
டேட்டா அளவு கூட கிடைக்கவில்லை. ஆனால் இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், மற்ற திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விநியோகிக்கப்பட்ட தினசரி டேட்டாவாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, 25ஜிபி அளவிலான டேட்டா முழுவதையும் ஒரே நேரத்திலும் பயன்படுத்தலாம்.
மேலும், இந்தத் திட்டத்தில், பயனர்கள் JioCinema, JioTV, JioCloud மற்றும் JioSecurity போன்ற கூடுதல் நன்மைகளைப் பெறலாம். அதோடு வழங்கமாக வழங்கப்படும் அன்லிமிடெட் காலிங், தினமும் எஸ்.எம்.எஸ் ஆகியவை வழங்கப்படும். மேலும், இந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கும் ஜியோ வெல்கம் ஆஃபரை பெற முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“