இந்தியாவில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை, அடுத்த ஆண்டு முதல் அமுல்படுத்தப்பட உள்ளதாகவும், அதற்கான சோதனைகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருவதாக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, அந்நிறுவனத்தின் 42வது வருடாந்திர கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 5ஜி சேவைக்கான கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளோம். இதன்மூலம், 100 சதவீதம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் இணைய சேவைகள் வழங்கப்பட உள்ளதா முகேஷ் அம்பானி மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது 4ஜி சேவை நடைமுறையில் உள்ளது. இதற்கடுத்த மொபைல் பிராட்பேண்ட் சேவை தான் 5ஜி நெட்வொர்க். இந்த புதிய 5ஜி நெட்வொர்க் சேவையின் மூலம், டவுன்லோடு மற்றும் அப்லோடுகளை வெகுவிரைவாக மேற்கொள்ளலாம். இணைய வேகம் குறைவு என்ற பேச்சுக்கு 5ஜி நெட்வொர்க்கில் இடமில்லை என்று உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியாவில், 5ஜி சேவைக்கான அலைக்கற்றை ஏலம் இன்னும் நடைபெறவில்லை. இந்திய தொலைதொடர்பு துறையில் நிலவும் நிதிப்பற்றாக்குறை காரணமாக, நாட்டில் 5ஜி அலைக்கற்றை ஏலம் 2021ம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜியோ நிறுவனம், 20க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுடன் இணைந்து உலகத்தரத்திலான தொழில்நுட்ப சேவைகளான 4ஜி, 5 ஜி , கிளவுட் கம்ப்யூட்டிங், ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் டிவைஸ்கள், பிக் டேட்டா, AR/VR, செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின், நேச்சுரல் லாங்குவேஜ் மற்றும் கம்ப்யூட்டர் விஷன் உள்ளிட்ட துறைகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதாக அம்பானி கூறினார்.
இந்த தொழில்நுட்பங்களின் உதவியால், மீடியா, நிதிச்சேவை நிறுவனங்கள், வர்த்தகம், கல்வி, சுகாதாரம், வேளாண்மை, சீர்மிகு நகரங்கள், ஸ்மார்ட் பொருட்கள் தயாரிப்பு மற்றும் இலகுவான போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஏற்படும் சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வுகளை கண்டறிந்து அதன் வளர்ச்சிக்கு தாங்கள் துணைபுரிந்து வருவதாக முகேஷ் அம்பானி மேலும் கூறினார்.
5ஜி சேவைக்காக, ஜியோ நிறுவனம் அதிகளவில் முதலீடு செய்துள்ளது.அடுத்த சில ஆண்டுகளில், இந்தியாவில், உலகத்தர 5ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. வருங்காலங்களில், ரிலையன்ஸ்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Reliance Jio to launch ‘Made in India’ 5G network: Mukesh Ambani