ரிலையன்ஸ் ஜியோ சில கூடுதல் 4ஜி மொபைல் டேட்டாவுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கும் மூன்று புதிய 5ஜி டேட்டா பூஸ்டர் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டங்களைப் பற்றிய விரைவான தகவல்கள் இங்கே.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ மூன்று புதிய 5ஜி டேட்டா பூஸ்டர் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்தத் திட்டங்கள் தினமும் 1 ஜிபி அல்லது 1.5ஜிபி மொபைல் டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களுக்குப் பொருந்தும்.
ரூ.51, ரூ.101, ரூ.151 விலையில் இந்த 5ஜி பூஸ்டர் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் மிகவும் குறைந்த விலை திட்டமான, ரூ.51 திட்டம் 3ஜிபி 4ஜி மொபைல் டேட்டாவை வழங்குகிறது, அதன் பிறகு வேகம் 44கேபிபிஎஸ் ஆக குறையும். 5G இணைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும் பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால் இந்திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டவை பெறலாம்.
இதே போல் ரூ.101 திட்டத்தில் 6ஜிபி டேட்டா மற்றும் ரூ.151 திட்டத்தில் 9ஜிபி டேட்டாவை பெறலாம். இந்த திட்டங்கள் உங்கள் ஆக்டிவ் பிளான் இருக்கும் வரை பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“