Advertisment

கட்டணத்தை உயர்த்திய ரிலையன்ஸ் ஜியோ... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

ரூ. 155 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் (28 நாட்களுக்கான) ரூ. 189 ஆகவும், ரூ. 209 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் ரூ. 249 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Reliance Jio Announces Tariff Hikes new Plans and Details in tamil
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ப்ரீபெய்டு திட்டங்களுக்கான செல்போன் கட்டணத்தை 12 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்த்துவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அந்த நிறுவனம் இன்று வியாழக்கிழமை (ஜூன் 27) வெளியிட்டுள்ளது. 

Advertisment

அதன்படி, ரூ. 155 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் (28 நாட்களுக்கான) ரூ. 189 ஆகவும், ரூ. 209 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் ரூ. 249 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், ரூ. 239 கட்டணம் ரூ. 299 ஆகவும், ரூ. 349 கட்டணம் ரூ. 399 ஆகவும், ரூ. 399 கட்டணம் ரூ. 449 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

56 நாட்களுக்கான ரூ. 479 கட்டணம் ரூ. 579 ஆகவும், ரூ. 533 கட்டணம் ரூ. 629 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 84 நாட்களுக்கான ரூ. 666 மதிப்புள்ள கட்டணம் ரூ. 799 ஆக உயர்ந்துள்ளது. மாதம், இரு மாதம் மற்றும் ஓராண்டு திட்டங்களின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. 

5G பயனர்களுக்கு புதிய அன்லிமிட்டட் ப்ளான்களையம்ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Jio Recharge Plan Reliance Jio
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment