Reliance Jio brings JioFiber data vouchers : ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு 6 முக்கியமான வவுச்சர்களை வெளியிட்டு அறிவித்துள்ளது அந்நிறுவனம். குறிப்பிட்ட அளவு மட்டும் ஒரு மாதத்திற்கு டேட்டாவை பயன்படுத்த இயலும் என்ற நிலையில் தான் திட்டங்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த காலகட்டத்திற்குள் டேட்டா முடிந்துவிட்டால் என்ன செய்ய? அதற்காக தான் ஆட்-ஆன் ப்ளான்களை அறிவித்துள்ளது ஜியோ ஜிகாஃபைபர்.
இந்த ஆட் ஆன் சேவைகள் ரூ.101-க்கு துவங்கி ரூ.4000 வரை செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 2டிபி வரை டேட்டாவை பெற இயலும். ரூ. 101 வவுச்சரில் 20 ஜிபி வரை டேட்டாவை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். ரூ.251க்கு 55ஜிபி டேட்டா, ரூ. 501க்கு 125ஜிபி டேட்டா, ரூ. 1001க்கு 275ஜிபி டேட்டா, ரூ. 2001க்கு 650ஜிபி டேட்டா, மற்றும் ரூ. 4001க்கு 2000ஜிபி டேட்டாவை ஜியோ நிறுவனம் வழங்குகிறது. இந்த வவுச்சர்களை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையம் அல்லது மைஜியோ செயலியில் இந்த வவுச்சர்களை வாங்கிக் கொள்ளலாம்.
சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்...
தற்போது நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ப்ளான்களில் என்ன வேலிடிட்டி இருக்கின்றதோ அப்படியே தான் தொடரும். இந்த ஆட் ப்ளான்கள் மூலமாக கூடுதல் வேலிடிட்டி எல்லாம் கிடைக்காது. மேலும் டவுன்லோட் ஸ்பீடிலும் எந்த மாற்றமும் இருக்காது. உங்கள் சப்ஸ்கிரிப்சனில் எந்த ஸ்பீட் இருக்கிறதோ அதுவே தொடரும். ஜியோ ஜிகாஃபைபரின் திட்டங்கள் ரூ.699க்கு துவங்குகிறது. ரூ.849 திட்டம் சில்வர் ப்ளான் என்றும், ரூ.1299க்கான திட்டம் கோல்ட் ப்ளான் என்றும், ரூ. 2499க்கான திட்டம் டையமண்ட் ப்ளான் என்றும், ரூ. 3999க்கான திட்டம் ப்ளாட்டினம் ப்ளான் என்றும், ரூ. 8,499க்கான திட்டம் டைட்டானியம் ப்ளான் என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும் படிக்க : உடனே உங்கள் வாட்ஸ்ஆப்பை ரீ-இன்ஸ்டால் செய்யுங்கள்… இல்லையென்றால்?