300 மில்லியன் வாடிக்கையாளர்களை வசப்படுத்திய ஜியோ… கொண்டாட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம்!

ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய 19வது நிர்வாக ஆண்டில் தான் 300 மில்லியன் வாடிக்கையாளர்கள் என்ற இலக்கை அடைந்தது.

jio prepaid plans, jio offers, Reliance Jio 2020 Offer unlimited voice calls, 1.5GB data, Jio Apps benefits, validity,
jio prepaid plans, jio offers

Reliance Jio cricket data plan : ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களைத் தொடர்ந்து 300 மில்லியன் வாடிக்கையாளர்கள் பட்டியலில் இணைந்தது ஜியோ நிறுவனம். ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் சேனல்களில் தொடர்ந்து ஒளிப்பரப்பாகிக் கொண்டே இருந்தது இந்த விளம்பரம். ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை இதுவரை வெளியிடவில்லை.

300 மில்லியன் வாடிக்கையாளர்கள்

ஜியோ நிறுவனம் துவங்கி கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆரம்பித்த 170 நாட்களிலேயே 100 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக வளர்ந்தது.

ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய 19வது நிர்வாக ஆண்டில் தான் 300 மில்லியன் வாடிக்கையாளர்கள் என்ற இலக்கை அடைந்தது. வோடஃபோன் நிறுவனமும் ஐடியாவும் ஒன்றிணைந்த பின்பு இந்தியாவில் மிகப் பெரிய நெட்வொர்க் கொண்ட நிறுவனமாக இருக்கிறது வோடஃபோன். மொத்தம் 400 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது இந்நிறுவனம்.

ரூ.251க்கான ஜியோ கிரிக்கெட் டேட்டா பேக்

இந்த மிகப் பெரிய வெற்றியை கொண்டாட ஜியோ நிறுவனம் ஜியோ கிரிக்கெட் டேட்டா பேக்கினை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. ரூ.251க்கு ரீசார்ஜ் செய்தால் 51 நாட்களுக்கு 2ஜிபி 4ஜி டேட்டாவை பெற்றுக் கொள்ள இயலும். இதன் வேலிடிட்டி 51 நாட்களாகும். ஆனால் இந்த பேக்கின் கீழ் யாருக்கும் கால் செய்யவோ எஸ்.எம்.எஸ் செய்யவோ இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க  : களைக்கட்டும் ஸ்மார்ட்போன் மார்க்கெட்… மே மாத புதுவரவுகள் என்னென்ன?

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Reliance jio cricket data plan now 300 million subscribers

Next Story
களைக்கட்டும் ஸ்மார்ட்போன் மார்க்கெட்… மே மாத புதுவரவுகள் என்னென்ன?OnePlus 7 first sale starts from June 4
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express