டெலிகாம் மார்க்கெட்டில் ஜியோ – எர்டெல் நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. போட்டி முனைப்பில் இரண்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு புதிய புதிய சலுகைகளை அறிவித்து வருவது வாடிக்கையாளர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது.
ஜியோ தீபாவளி:
ரீசார்ஜ் திட்டங்களில் கூட புதிய புதிய மாற்றங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர பல்வேறு முயற்சிகளை இரண்டு நிறுவனங்களும் எடுத்து வருகின்றன. அந்த வகையில் தற்போது ஏர்டெல் நிறுவனம்
ஜியோ நிறுவனம், தீபாவளியை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. 25 கோடி வாடிக்கையாளர்களை எட்டியுள்ள ஜியோ தீபாவளி ஆஃபரை படு ஜோராக வழங்கியுள்ளது.
தீபாவளி ஆஃபரின் கீழ் அனைத்து பயனர்களுக்கு 100% உடனடி கேஷ் பேக் சலுகை வழங்கப்பட உள்ளது. தீபாவளி சலுகைகள் அக்டோபர் 18 முதல் நவம்பர் 30 வரை வழக்கப்பட்டுள்ளது. பயனர்களுக்கு வழங்கப்படும் கேஷ்பேக் கூப்பன் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும்.
100% கேஷ்பேக்:
100% கேஷ் பேக் சலுகை ரூ.149, ரூ.198, ரூ.299, ரூ.349, ரூ.398, ரூ.399, ரூ.448, ரூ.449, ரூ.509, ரூ.799, ரூ.999, ரூ.1999, ரூ.4999 மற்றும் ரூ.9999 ஆகிய ரீசார்ஜ் திட்டங்களுக்கு பொருந்தும்.
அதோடு, பயனருக்கு மூன்று ரூ.500-க்கான கூப்பன் மற்றும் ஒரு ரூ.200-க்கான கூப்பன் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.