ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. மொபைல் நெட்வெர்க் சேவை, பிராட்பேண்ட், ஜியோ ஃபைபர் உள்பட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் நேற்று திடீரென ஜியோ சேவை முடங்கியது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இந்த சேவை முடங்கியது. இதனால் பயனர்கள் அழைப்புகளை மேற்கொள்ள முடியாமலும், இன்டர்நெட் பயன்படுத்த முடியாமலும் தவித்தனர்.
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப் போன்ற தளங்களை பயன்படுத்த முடியவில்லை எனப் புகார் தெரிவித்தனர். நெட்வொர்க் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவை முடங்கியதாக கூறப்படுகிறது.
38 சதவீதம் பேர் தங்கள் ஜியோ ஃபைபர் சேவையில் பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும், 7 சதவீத பயனர்கள் மொபைல் நெட்வொர்க் சேவைகளை பயன்படுத்த முடியவில்லை எனவும் சமூக வலைதளத்தில் புகார் அளித்தனர். எனினும் ஜியோ இப்பிரச்சனை குறித்து ஆய்வு செய்து சரி செய்து வருவதாகவும், எதனால் இப்பிரச்சனை ஏற்பட்டது என்று குறிப்பிடவில்லை.
சண்டிகர், டெல்லி, லக்னோ, ராஞ்சி, கொல்கத்தா, கட்டாக், நாக்பூர், சூரத், மும்பை, புனே, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, குவஹாத்தி மற்றும் பல நகரங்களில் ஜியோ சேவை முடங்கியதாக பயனர்கள் புகார் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“