ஜியோபைபர் சேவை அறிமுகம் - வாடிக்கையாளர்களை அசத்தும் அறிவிப்புகள்

Reliance Jio Fiber Broadband Plans, Price List: நாட்டின் 1,600 நகரங்களில் இந்த சேவை வழங்கப்பட உள்ளது

Reliance Jio Fiber Broadband Plans, Price List: பிராட்பேண்ட், வீடியோ காலிங், அளவில்லா பொழுதுபோக்கு , வீடியோ கேமிங் உள்ளிட்ட அனுபவங்கள் இனி உங்கள் வீடுகளிலேயே…..

ஜியோ பைபர் அறிமுக சலுகையாக டிவி, 4கே செட் டாப் பாக்ஸ், அளவில்லா இன்டர்நெட், வீடியோ காலிங் சேவைகள்

உலகின் மிகப்பெரிய மொபைல் டேட்டா நெட்வொர்க் நிறுவனமான ஜியோ நிறுவனம், ஜியோபைபர் சேவையை இன்று ( செப்டம்பர் 5ம் தேதி) அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் 1,600 நகரங்களில் இந்த சேவை வழங்கப்பட உள்ளது. ஜியோ மொபைல் சேவை துவக்கப்பட்டு ( 2016, செப்டம்பர் 5) இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தன்னுடைய பயனாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவை வழங்கும்பொருட்டு, ஜியோ பைபர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில், தற்போது நடப்பு இணையதள வேகம் என்பது 25 எம்பீபிஎஸ் மட்டுமே ஆகும். ஏன் வல்லரசு நாடான அமெரிக்காவில் கூட, இணையதள வேகம் 90 எம்பீபிஎஸ் என்ற அளவிலேயே உள்ளது. ஜியோபைபர் நிறுவனம், நாட்டில் முதன்முறையாக தனது பைபர் பிராட்பேண்ட் சேவையை 100 எம்பீபிஎஸ் முதல் 1 ஜிபீபிஎஸ் வேகத்தில் வழங்க உள்ளது

ஜியோபைபர் சேவைகள்

அல்ட்ரா ஹை ஸ்பீட் பிராட்பேண்ட் இணையதள சேவை ( 1 ஜிபீபிஎஸ் வரை)
வீடியோ காலிங், வாய்ஸ் காலிங், கான்பிரன்சிங் மற்றும் சர்வதேச அழைப்புகள்
டிவி வீடியோ காலில் மற்றும் கான்பிரன்சிங்
எண்டர்டெய்ன்மென்ட் ஓடிடி ஆப்ஸ்கள்
கேமிங்
ஹோம் நெட்வொர்க்கிங்
உபரகண பாதுகாப்பு
விர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவம்

மாத திட்டங்கள்

ஜியோ பைபர் மாததிட்டங்கள் ரூ.699ல் துவங்கி ரூ.8,499 வரையில் உள்ளன
மிகக்குறைந்த மாததிட்டத்திற்கே 100 எம்பீபிஎஸ் வேகத்தில் இணையதள சேவை
1 ஜிபீபிஎஸ் வேகம் வரை இணையதள சேவையை பெறலாம்
சர்வதேச நாடுகளின் மதிப்பீட்டில் ஜியோ பைபரின் சேவை பத்தில் ஒரு பங்கு தான். ஜியோ பைபர் சேவையை, அனைவரும் தங்களது பட்ஜெட்டிலேயே உயர்தர சேவை பெறவேண்டும் என்றநோக்கத்திலேயே ஜியோபைபர் அறிமுகம்

நீண்டகால திட்டங்கள்

மூன்று மாதம், ஆறு மாதம் மற்றும் 1 ஆண்டு காலஅளவிலான திட்டங்களில் மிக அதிக சேவை
நீண்டகால திட்டங்களுக்கான தொகையை, மாதாந்திர தவணை ( EMI) ஆக செலுத்தும் பொருட்டு வங்கிகளுடன் ஜியோ இணைந்து செயலாற்ற உள்ளது.
ஜியோபார்எவர் ஆண்டு சந்தா வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் வசதிகள்
ஜியோ ஹோம் கேட்வே
ஜியோ 4கே செட்டாப் பாக்ஸ்
டிவி ( கோல்டு திட்டம் மற்றும் அதற்கு மேம்பட்ட திட்டங்களுக்கு)
விருப்பமான ஓடிடி செயலிகள்
அளவில்லா அழைப்புகள் மற்றும் இணையதள சேவை

ஜியோபைபரை எப்படி பெறுவது

ஜியோ இணையதளத்தின் மூலமாகவோ அல்லது மைஜியோ செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்
ஜியோபைபர் சேவைக்கு பதிவு செய்யவேண்டும்
ஜியோபைபர் சேவை உங்கள் பகுதியில் கிடைத்தால், ஜியோ பிரதிநிதி தங்களை தொடர்பு கொள்வார்.

ஏற்கனவே உள்ள ஜியோபைபர் வாடிக்கையாளர்கள்..

ஜியோபைபர் பயனாளர்கள் எனில், தங்கள் சேவைகளை மேம்படுத்தி கொள்ளலாம்.
மைஜியோ செயலியை பதிவிறக்கம் செய்து அதன்மூலம் இந்த சேவையை பெறலாம்
3 மாதம், 6 மாதம் மற்றும் 1 ஆண்டு சந்தாவை செலுத்தி செட்டாப் பாக்ஸ் உள்ளிட்ட வெகுமதிகளை பெறலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close