ரிலையன்ஸ் ஜியோ போட்டியை சமாளிப்பதற்காக, 93 ரூபாய்க்கு தினம் 1ஜிபி என்ற புதிய பேக்கை ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கானது.
ஏர்டெல் அறித்துள்ள ரூ.93 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளும், தினமும் 1 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை பத்து நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 1 ஜிபி டேட்டா திட்டம் அனைத்து சாதனங்களிலும் பொருந்தும் என்றும் 3ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்போரும் இதனை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் 98 ரூபாய் பேக்குக்கு போட்டியாகவே இந்த திட்டத்தை ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக, ஜியோவின் இந்த 98 ரூபாய் பேக்கில், அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளும், தேசிய ரோமிங், 140 எஸ்.எம்.எஸ். அதிவேக டேட்டா 2.1 ஜிபி 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
சலுகைகளை ஒப்பிடும் போது ஏர்டெல் திட்டம் சற்றே சிறப்பானதாக தெரிந்தாலும் ஜியோ சலுகையில் கூடுதல் டேட்டா வழங்குகிறது. சேவை அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஏர்டெல், வோடபோன், ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்களை விட ஜியோ 20 சதவிகிதம் கூடுதல் டேட்டா வழங்கி வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ டி.வி., ஜியோ சினிமா, ஜியோ மியூசிக் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்குகிறது. ஏர்டெல் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் டி.வி. மற்றும் விண்க் மியூசிக் சேவையை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.