Reliance Jio introduces 30 minutes free IUC talk time offer : அக்டோபர் மாதம் 9ம் தேதி மாலை ஜியோ ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பின் படி ஜியோ வாடிக்கையாளர்கள் ஒரு நிமிடம் இதர நெட்வொர்க்கிடம் பேசினால் அதற்கு கட்டணமாக 6 பைசா செலுத்த வேண்டும் என்று கூறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ஐ.யு.சி கட்டணம் எனப்படும் இண்டெர்கனெக்ட் யூசேஜ் சார்ஜ் கட்டணம் ஒரு நெட்வொர்க்கில் இருந்து வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க் நம்பர்களுக்கு பேசினால் வசூலிக்கப்படும். கடந்த மூன்று ஆண்டுகளாக ஜியோ தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக இந்த சேவையை வழங்கி வந்தது. அதற்கான கட்டணமாக 13 ஆயிரம் கோடியை கட்டியுள்ளது ஜியோ. அந்த பணத்திற்கு ஈடாகவும், ட்ராய் இந்த கட்டணத்தை ஜீரோவாக அறிவிக்கும் வரையிலும் கால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறி தன் தரப்பு விளக்கங்களை அளித்தது ஜியோ. இருப்பினும் பல வாடிக்கையாளர்கள் தங்களின் நெட்வொர்க்கினை மாற்றும் எண்ணத்தில் உள்ளனர்.
டாக் டைம் டாப்-அப் ஆஃபர்கள் மற்றும் ரீசார்ஜ் பேக்குகளையும் ஏற்கனவே அறிவித்துவிட்டது ஜியோ. இந்நிலையில் கோபமடைந்த வாடிக்கையாளர்களை சமாதானப்படுத்த 30 நிமிட இலவச கால் சலுகையை வழங்க திட்டமிட்டுள்ளது ஜியோ நிறுவனம். மேலும் படிக்க : ஜியோவின் புதிய அறிவிப்பால் குழம்பிய வாடிக்கையாளர்கள்… புதிய டாக்-டைம் திட்டங்கள் இது தான்!
முதன் முறையாக டாக்-டைம் பேக் ரீசார்ஜ் செய்பவர்கள் கூடுதலாக 30 நிமிட டாக் டைம் பெற்றுக் கொள்ளலாம் என்று தங்களின் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலமாக தகவல்கள் அளித்துள்ளது. இது ஒன் டைம் ஆஃபர் தான். இதன் வேலிடிட்டியும் 7 நாட்கள் வரையில் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோவின் புதிய டாக் டைம் திட்டங்கள்
ஏர்டெல், வோடபோன், அல்லது பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கில் இயங்கும் எண்களுடன் பேசுவதற்காக சிறப்பு டாப்-அப் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம். அதன்படி ரூ.10க்கு ரீசார்ஜ் செய்தால் 124 நிமிடங்கள் பேசிக் கொள்ளலாம். ரூ. 20க்கு ரீசார்ஜ் செய்தால் 249 நிமிடங்கள் பேசிக்கொள்ளலாம். ரூ. 50க்கு ரீசார்ஜ் செய்தால் 656 நிமிடங்கள் பேசிக் கொள்ளலாம். ரூ. 100க்கு ரீசார்ஜ் செய்தால் 1,362 நிமிடங்களுக்கு நீங்கள் பேசிக் கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.