/tamil-ie/media/media_files/uploads/2023/05/reliance-jio-sign-bloomberg-759-2.jpg)
Reliance Jio
ரிலையன்ஸ் ஜியோ சுதந்திர தின ஆஃபரில் ரூ.2,999க்கு ரீசார்ஜ் செய்தால் 1 வருட வேலிடிட்டி. அன்லிமிடெட் காலிங் வசதி, தினமும் 2.5ஜிபி டேட்டாவுடன் விமான, ஹோட்டல் கட்டண சலுகைகள், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் சலுகைகள், ஸ்விகி என ஏராளமான ஆஃபர்கள் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.2,999 திட்டம்
கூடுதல் நன்மைகளை தெரிந்து கொள்வதற்கு முன் வருடாந்திர ரூ.2,999 திட்டத்தின் நிலையான சலுகைகளைப் பற்றி பார்ப்போம். பயனர்கள் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் வசதி, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் 365 நாட்களுக்கு வழங்கப்படும். மொத்தமாக 912.5ஜிபி டேட்டா வழங்கப்படும். பேக் பயனர்களுக்கு 5G டேட்டாவையும் பெற தகுதியுடையவர்கள்.
கூடுதல் ஆஃபர்கள்
ரிலையன்ஸ் ஜியோ சுதந்திர தின ஆஃபர் 2023 ப்ரீபெய்ட் ஜியோ பயனர்களுக்கு கூடுதல் பலன்களையும் வழங்குகிறது. ரூ.249 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள ஸ்விக்கி ஆர்டர்களுக்கு ரூ.100 தள்ளுபடி, யாத்ரா ஆப் மூலம் முன்பதிவு செய்யும் விமான டிக்கெட்களுக்கு ரூ.1,500 வரை சலுகை வழங்கப்படுகிறது.
கூடுதலாக, யாத்ரா மூலம் உள்நாட்டு ஹோட்டல் முன்பதிவுகளில் பயனர்கள் 15 சதவீத தள்ளுபடி (ரூ. 4,000 வரை) பெற முடியும். அஜியோவில் குறிப்பிட்ட ஆடைகளுக்கு ரூ.999 அல்லது அதற்கு மேற்பட்ட ஆர்டர்களுக்கு ரூ.200 தள்ளுபடி. நெட்மெட்களில் கூடுதல் என்எம்எஸ் சூப்பர் கேஷுடன் ரூ.999க்கு மேல் ஆர்டர் செய்தால் 20 சதவீத தள்ளுபடியையும் பெறலாம்.
மேலும், குறிப்பிட்ட ஆடியோ சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.
எப்படி ரீசார்ஜ் செய்வது?
ஸ்மார்ட் போன் மூலம் மை ஜியோ ஆப் அல்லது ஜியோ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.2,999 விலை திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.