ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டம் (ஏ.ஜி.எம்) நேற்று (ஆகஸ்ட் 28) நடைபெற்றது. அப்போது 3 புதிய பட்ஜெட் ப்ரெண்ட்லி ப்ரீபெய்ட் சர்வதேச ரோமிங் திட்டங்களை அறிவித்தது. புதிய சர்வதேச திட்டங்கள் முந்தைய திட்டங்களுடன் ஒப்பிடும்போது அதிக டேட்டா மற்றும் அழைப்பு நிமிடங்களை வழங்குகின்றன. அதோடு 44 நாடுகளுக்கு பொருந்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
ரூ.1,499 என்ற கட்டண விலை முதல் இந்த புதிய திட்டம் செயல்படுகிறது. 150 நிமிட அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் உடன் வரும் ரூ.1,499 திட்டமானது பட்டியலில் குறைந்த விலை திட்டமாகும். இது 14 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 1GB மொபைல் டேட்டாவை வழங்குகிறது. எனினும் இன்கமிங் அழைப்புகளுக்கு ஜியோ கட்டணம் வசூலிக்கும்.
இலவச இன்கமிங் திட்டம்
இலவச இன்கமிங்கை வழங்கும் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், 250 அழைப்பு நிமிடங்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்களை வழங்கும் ரூ.3,999 திட்டத்தைப் பாருங்கள். இது 4ஜிபி மொபைல் டேட்டாவுடன் வருகிறது மற்றும் 30 நாட்கள் செல்லுபடியாகும்.
இறுதியாக ரூ.5,999 திட்டமானது 400 நிமிடங்களுக்கு இலவச இன்கமிங், 500 எஸ்எம்எஸ் மற்றும் 6ஜிபி மொபைல் டேட்டாவுடன் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக இருக்கும்.
அனைத்து சர்வதேச ரோமிங் திட்டங்களுடனும், இன்கமிங் எஸ்.எம்.எஸ் இலவசம். எனினும் இந்த திட்டங்களின் விலை ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும். ரீசார்ஜ் செய்யும் முன் திட்டங்களின் விவரங்களை சரிபார்த்து தேர்வு செய்யவும். உங்கள் இருப்பிடம் மற்றும் பயன்படுத்தப்படும் நெட்வொர்க் ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச ரோமிங் கட்டணங்கள் விதிக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”