Reliance Jio is offering only one Rs601 prepaid recharge plan with disney hotstar subscription Tamil news : ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களைத் திருத்தியது மற்றும் அவற்றின் விலைகளையும் உயர்த்தியது. இந்த டெலிகாம் ஆபரேட்டர் இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் ஒரே ஒரு ப்ரீபெய்ட் பேக்கை மட்டுமே வழங்குகிறது. முன்னதாக, ரிலையன்ஸ் ஜியோ இந்த OTT சந்தாவுடன் குறைந்தது ஐந்து திட்டங்களையாவது விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விலை உயர்வுக்குப் பிறகு, ஜியோவின் ரூ.601 திட்டம் மட்டுமே ப்ரீபெய்ட் பேக்காக இப்போது உள்ளது. இது, 12 மாத டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் வழங்கப்படுகிறது. இந்தச் சலுகையைப் பெற, தகுதியான திட்டம் எந்த மொபைல் எண்ணில் பயன்படுத்தப்பட்டதோ அந்த மொபைல் எண்ணைப் பயன்படுத்தி வாடிக்கையாளர் OTT பயன்பாட்டில் உள்நுழைய வேண்டும்.
இந்த திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும். ஒருவருக்கு ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டாவும் கிடைக்கும். இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. அதாவது பயனர்கள் மொத்தம் ௯௦ ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். இது தவிர, ஜியோ ரூ.601 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்துடன் கூடுதலாக 6ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
வழங்கப்பட்ட சலுகை தீர்ந்துவிட்டால், வாடிக்கையாளர்கள் 64Kbps வேகத்தில் இணையத்தைப் பெறுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அனைத்து ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களைப் போலவே, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் மற்றும் ஜியோசினிமா உள்ளிட்ட அனைத்து ரிலையன்ஸ் ஜியோ பயன்பாடுகளுக்கும் இலவச அணுகலைப் பெறுவீர்கள். மற்ற சிம்களுடன் இந்த செயலியைப் பயன்படுத்த முடியாது.
தற்போது, ரிலையன்ஸ் ஜியோ அனைத்து போஸ்ட்பெய்ட் திட்டங்களுடனும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை வழங்குகிறது. இதனுடன், ஒருவர் போஸ்ட்பெய்டு திட்டங்களுடன் Netflix மற்றும் Amazon Prime மெம்பர்ஷிப்பைப் பெறுகிறார். மேலும், விலைகள் ரூ.399 முதல் தொடங்குகின்றன. அடிப்படை அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவை அடங்கும். இந்தத் திட்டம் 75ஜிபி மொத்த டேட்டாவையும் வழங்குகிறது மற்றும் தொகுக்கப்பட்ட வரம்பு முடிந்தவுடன், வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஜிபிக்கு ரூ.10 வசூலிக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil