வந்தாச்சு.. வந்தாச்சு.. சென்னையில் 5ஜி.. ஜியோ அதிரடி

ஜியோ பயனர்களுக்கு 1 ஜிபிபிஎஸ்+ வேகத்துடன் வரம்பற்ற (Unlimited) 5ஜி டேட்டாவை உறுதியளிக்கிறது.

Reliance Jio launches 5G in Chennai
ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி சேவையை சென்னையில் விரைவில் தொடங்க உள்ளது.

டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசிக்குப் பிறகு ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி சேவைகளை சென்னைக்குக் கொண்டுவருகிறது என்று தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்த வகையில், சென்னையில் உள்ள ஜியோ பயனர்கள் சனிக்கிழமை (அக்.22) 5G நெட்வொர்க்-ஐ பயன்படுத்தத் தொடங்கலாம். மற்ற பிராந்தியங்களைப் போலவே, சென்னையில் உள்ள பயனர்களும் 5G ஐ அணுக ஜியோவிடமிருந்து அனுமதி அழைப்பு தேவைப்படும்.

ஏனெனில் குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கே சோதனை அடிப்படையில் இந்த சேவை தற்போது கிடைக்கிறது.

வாடிக்கையாளர்களின் 5G சேவைகளை பரிசோதிக்கவும், சேவை மற்றும் பயனர் அனுபவக் கருத்துகளை வழங்கவும் ஜியோவின் True 5G வெல்கம் ஆஃபரின் கீழ் இந்த சேவைகள் கிடைக்கின்றன.

ஜியோ வெல்கம் ஆஃபர் பயனர்கள் தற்போதுள்ள ஜியோ சிம் அல்லது 5ஜி கைபேசியை மாற்றத் தேவையில்லாமல் தானாகவே ஜியோ ட்ரூ 5ஜி சேவைக்கு மேம்படுத்தப்படுவார்கள்.

மேலும், ஜியோ பயனர்களுக்கு 1 ஜிபிபிஎஸ்+ வேகத்துடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை உறுதியளிக்கிறது. இதேபோல், மற்ற இடங்களில், ரிலையன்ஸ் ஜியோ தனது 5G சேவைகளை ராஜஸ்தானின் நாத்துவாராவில் உள்ள Wi-Fi ஹாட்ஸ்பாட்கள் மூலம் இன்று முதல் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது.

இது, கல்வி நிறுவனங்கள், மத ஸ்தலங்கள், ரயில் நிலையங்கள் போன்ற அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பொது இடங்களில் “அனைவருக்கும் 5G” வழங்கும் பரந்த நோக்கத்தின் கீழ் வழங்கத் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Reliance jio launches 5g in chennai

Exit mobile version