ரிலையன்ஸ் ஜியோ குறிப்பிட்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் நெட்ஃபிலிக்ஸ் சந்தா இலவசமாக வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் தனது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் நெட்ஃபிலிக்ஸ் சந்தாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உள்நாட்டு டெலிகாம் நிறுவனங்களிடையே போட்டியை தீவிரப்படுத்தும் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் வழங்குநருக்கு வருமானத்தை ஈட்ட உதவும் என்றும் கூறியுள்ளது.
இந்திய பில்லியனர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் டெலிகாம் பிரிவான ஜியோ, சுமார் 400 மில்லியன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் இரண்டு பேக்கேஜ்கள் மூலம் நெட்ஃபிலிக்ஸ் சந்தாவைப் பெறுவதற்கான விருப்பம் உள்ளது, ஒவ்வொன்றும் 84 நாட்கள் வரை செல்லுபடியாகும்.
ரூ. 1,099 திட்டம் நெட்ஃபிலிக்ஸ் மொபைல் தளங்களுக்கான அணுகலை வழங்கும், மற்றொன்று ரூ. 1,499 இது டி.வி, லேப்டாப் உள்ளிட்ட பெரிய திரைகளுக்கான அடிப்படை பேக்கேஜுக்கான அணுகலை வழங்கும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.
ஜியோவின் போட்டியாளர்களான பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை நெட்ஃபிலிக்ஸ் போட்டியாளரான வால்ட் டிஸ்னியின் இந்தியா ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு ப்ரீபெய்ட் தொகுக்கப்பட்ட திட்டங்கள் மூலம் சந்தாவை வழங்குகின்றன.
முன்னதாக, நெட்ஃபிலிக்ஸ் வருவாய் அதிகரிக்க பாஸ்வேர்ட் ஷேரிங், விளம்பர ஆதரவு திட்டங்கள் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“