Advertisment

3 மாத வேலிடிட்டி; நெட்ஃபிலிக்ஸ், ஹாட்ஸ்டார், ஜீ5 சந்தா இலவசம்: ஜியோ புதிய ஏர் ஃபைபர் திட்டம் அறிமுகம்

முதல் முறையாக ஜியோ ஏர் ஃபைபர் திட்டத்தில் 3 மாத வேலிடிட்டியில் சந்தா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Jio new.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. மொபைல் நெட்வொர்க்,  பிராட்பேண்ட் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஃவயர்லெஸ் சேவையான ஜியோ ஏர் ஃபைபர் திட்டத்தில் முதல் முறையாக நிறுவனம் 3 மாத வேலிடிட்டியில் சந்தா திட்டம் அறிமுகம் செய்துள்ளது. டேட்டா திட்டங்களுடன், ஓ.டி.டி சந்தாவுக்கான சலுகையும்  வழங்குகிறது. இலவச ஓ.டி.டி சந்தா வழங்குகிறது.

Advertisment

3 மாத வேலிடிட்டியுடன் கூடிய விலை குறைந்த ஜியோ ஏர்ஃபைபர் திட்டத்தின் விலை ரூ. 1797 ஆகும். இது ஜியோ சினிமா, டிஸ்னி + ஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் சோனிலைவ் உள்ளிட்ட OTT சந்தாக்களுடன் 30 mbps வேகத்தில் 1000 ஜிபி டேட்டாவைப் வழங்குகிறது.

அதே 3 மாத வேலிடிட்டியில் 100 mbps வேகத்தில் 2 திட்டங்களை ஜியோ வழங்குகிறது. 100 mbps வேகம்,  1000 ஜிபி டேட்டாவில் 14 OTT சந்தாக்களுடன்  ரூ.2697 விலையில் ஒரு திட்டமும், 17 OTT சந்தாக்களுடன்  ரூ.3597 விலையில் மற்றொரு திட்டத்தையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில், நெட்ஃபிலிக்ஸ் மற்றும் பிற சந்தாக்கள் இடம்பெறுகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Reliance Jio
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment