/indian-express-tamil/media/media_files/2025/05/28/0MZinmPfJs86qfJvvaBu.jpg)
ஏர்டெல் எல்லாம் ஓரமா போ! கம்மி விலையில் ஜியோவின் 5ஜி பிளான்! அதிரடி சரவெடி!
ஜியோ அதன் கஸ்மர்களுக்கு குறைந்த விலையில் தினமும் 2 GB டேட்டா வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் விலை வெறும் ரூ.200-க்குள் வரும் இருப்பினும். இதன் வேலிடிட்டி அதிகம் என சொல்ல முடியாது. அதாவது, நீங்கள் குறைந்த விலையில் தினமும் 2 GB டேட்டா பெற விரும்பினால் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதாவது இத்திட்டமானது ரூ.198-ல் வருகிறது. இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
Jio ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம்:
நீங்கள் தினமும் 2GB டேட்டா வழங்கும் திட்டத்தை விரும்பினால், வெறும் ரூ.198 யில் தினமும் 2GB டேட்டா நன்மை கிடைக்கும் இதனுடன் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது. மேலும் இதில் நீங்கள் Unlimited 5G டேட்டா நன்மையை பெறலாம் ஆக மொத்தம் இந்ததிட்டத்தில் 28 GB டேட்டா வழங்கப்படுகிறது. இதன் ஸ்பீட் குறையும்போது 64 Kbpsஆக குறைக்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி பற்றி மொத்தம் 14 நாட்கள். இதை தவிர இதில் JioTV, JioCinema மற்றும் JioCloud சப்ஸ்க்ரிப்சன் வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் பயனர்களுக்கு கூடுதல் கட்டணமின்றி அன்லிமிடெட் 5G டேட்டாவை வழங்குகிறது. ஜியோ 5G டேட்டாவிற்கு எந்த வரம்பும் இல்லை. ஏர்டெல், வோடஃபோன் ஐடியா (Vi) தங்கள் பயனர்களுக்கு மாதத்திற்கு 300GB என வரம்பு விதித்துள்ள நிலையில், ஜியோ 5G பயன்பாட்டிற்கு FUP (Fair Usage Policy) வரம்பை விதிக்கவில்லை. வேறு எந்த கூடுதல் பலன்களும் இல்லை என்றாலும், நீண்ட கால திட்டத்தில் முதலீடு செய்வது மதிப்புள்ளதா என்பதை தீர்மானிக்க, ஜியோவின் 5G-ஐப் பரிசோதனை செய்ய விரும்பும் பயனர்களுக்கு திட்டம் போதுமானது. ஜியோவின் ரூ.198 திட்டத்தை நிறுவனத்தின் மொபைல் செயலியான "MyJio" அல்லது என்ற இணையதளம் மூலமாகவோ, அல்லது PhonePe, Google Pay, Cred போன்ற பிற 3-ம் தரப்பு தளங்கள் மூலமாகவோ ரீசார்ஜ் செய்யலாம்.
14 நாட்கள் வேலிடிட்டி என்பது குறைவாக இருப்பதாக உணர்ந்தால், 18 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.199 திட்டத்தைத் தேர்வு செய்யலாம். இந்தத் திட்டத்திலும் பல பலன்களைப் பெறுலாம். 189 பிளான் மிகவும் பிரபலமானது. இதில் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.
ஜியோ வாடிக்கையாளர்கள் தங்கள் தேவையைப் பொறுத்து இந்த மூன்று திட்டங்களில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். இணையத்தை அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால், நிறைய டேட்டா கொண்ட திட்டத்தில் சேரலாம். ஜியோவின் அனைத்து திட்டங்களிலும் அன்லிமிட்டட் அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் ஆகியவை பொதுவானவை. இலவச டேட்டா அளவுதான் மாறுபடும். இது தவிர கூடுதல் டேட்டா ரீசார்ஜ் வசதியையுத் ஜியோ வழங்குகிறது. ஜியோ 5ஜி நெட்வொர்க்கையும் கொண்டிருக்கிறது. குறைந்த வேலிடிட்டியில் சிறந்த டேட்டா பிளான் வேண்டும் என்றால் ரூ.198 திட்டத்தை தேர்வு செய்வது பொருத்தமாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.