/indian-express-tamil/media/media_files/LTjiv7f5BWMFFvLscwOu.jpg)
ஜியோ ஏர்ஃபைபர் மற்றும் ஜியோ ஃபைபர் பயனர்களுக்கு நிறுவனம் புதிதாக அல்டிமேட் ஸ்ட்ரீமிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மாதம் ரூ.888 விலையில், புதிய போஸ்ட்பெய்ட் திட்டமாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 30Mbps பதிவிறக்க வேகத்துடன் அன்லிமிடெட் டேட்டா வழங்குகிறது. இதில் ஜியோசினிமா பிரீமியம், நெட்ஃபிலிக்ஸ், பிரைம் வீடியோ (லைட்), டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்பட 15 க்கும் மேற்பட்ட ஓ.டி.டி தளங்களுக்கான சந்தாவுடன் வருகிறது.
இதுதான்ஜியோவின் குறைந்த விலை திட்டமாக உள்ளது. எனினும் இது போஸ்ட்பெய்ட் திட்டமாகும். ப்ரீபெய்ட் பயனர்கள் கூட எளிதில் இந்த திட்டத்திற்கு மாறலாம். ஜியோ இதில் அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படும் என்று கூறினாலும் ஏர்ஃபைபரில் டேட்டா பயன்பாடு 1000 ஜிபி வரை மட்டுமே உள்ளது, மேலும் ஜியோ ஃபைபரில் 3300 ஜிபி வரை மட்டுமே பயன்படுத்த முடியும்.
அதோடு இந்தத் திட்டத்தில் மேலும் பல சலுகைகள் உள்ளன. ‘ஐபிஎல் தன் தன தான’க்கான 50 நாள் வவுச்சரை வழங்குகிறது, இது ஏற்கனவே உள்ள பயனர்களுக்கும் புதிய பயனர்களுக்கும் 50 நாட்களுக்கு இலவச இன்டர்நெட் சேவையை வழங்கும். எனினும் இந்த வவுச்சர் மே 31 வரை மட்டும் வேலிடிட்டி கொண்டது.
புதிய ரூ.888 திட்டத்தில் உள்ள 15 ஓ.டி.டி தளங்கள்
நெட்ஃபிக்ஸ் (பேசிக்)
பிரைம் வீடியோ (லைட்)
ஜியோசினிமா பிரீமியம்
டிஸ்னி+ ஹாட்ஸ்டார்
சோனி லிவ்
ஜீ5
சன் நெக்ஸ்ட்
Hoichoi
Discovery+
ALTபாலாஜி
ஈரோஸ் நவ்
லிங்கசஜதே நாடகம்
ஷெமருமில்
DocuBay
எபிகான்
ஈ.டி.வி வின் (JioTv+ வழியாக)
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.