ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் ஜியோ, ஏர்டெல், வி.ஐ போன்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அண்மையில் தங்களது ரீசார்ஜ் விலையை உயர்த்தின.
இந்தநிலையில், ஜியோ மீண்டும் ரூ.91 திட்டத்தை அறிமுகம் செய்வாதாக அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த திட்டம் ஜியோபோன் பயனர்களுக்கானது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதலாக 200எம்பி டேட்டாவும் இதில் கிடைக்கும் என ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், அன்லிமிடெட் காலிங் வசதி, மாதம் 50 எஸ்எம்எஸ் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. அதோடு, ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“