Jio UPI Payment Feature :டெலிகாம் நிறுவனத்தில் மிகப்பெரிய தடம் பதித்திருக்கும் ஜியோ நிறுவனம் ப்ராட்பேண்ட், இ-காமர்ஸ் என அனைத்திலும் புது முத்திரை பதித்தது. தற்போது பேமெண்ட் செக்டாரிலும் கால்த்தடம் பதிக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது யு.பி.ஐ-ஐ அடிப்படையாக கொண்டு இயங்கும் பேமெண்ட் ஆப்பினை. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணம் அனுப்பவும் பெறவும் இயலும். மிகவிரையில் அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களும் இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதிகாரப்பூர்வமாக எப்போது பயன்பாட்டிற்கு வருகிறது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
Advertisment
இது தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தாரிடம் அறிந்து கொள்ள முற்பட்ட போது யு.பி.ஐ அடிப்படையாக கொண்டு செயலி உருவாக்கப்பட்டு வருவதை மறைக்கவோ ஆம் என்று ஏற்றுக் கொள்ளவோ இல்லை. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம், தற்போது இந்த ஆப்பினை டெஸ்ட் செய்து வருகிறது. அனைத்து வாடிக்கையாளர்களும் ஒரு நாள் நிச்சயம் பயன்படுத்தும் வகையில் இது வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் பிகில் வசூலைத் தாண்டாத ரஜினியின் தர்பார்; உண்மை நிலவரத்தைக் கூறும் விநியோகஸ்தர்..
தற்போது வெளியான தகவல் மட்டும் ஊர்ஜிதமானால், நெட்வொர்க் நிறுவனம் நடத்தும் முதல் யு.பி.ஐ. சர்வீஸ் இதுவாகவே இருக்கும். ஏற்கனவே ஜியோ மணி மூலமாக வாலெட் சேவைகளை செய்து வருகிறது ஜியோ என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்ஆப் நிறுவனமும் வாட்ஸ்ஆப் பே குறித்து வெகுநாட்களாக ஆராய்ச்சி செய்து வருகிறது. ஆகவே இந்த ஆண்டில் இந்த இரண்டு முக்கியமான பயன்பாடுகளை இந்திய வாடிக்கையாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.