3,6, 12 மாதங்களுக்கான ஜியோவின் ப்ரீபெய்ட் ப்ளான்கள் இவை தான்!

உள்ளூர் வெளியூர் அழைப்புகள் முற்றிலும் இலவசம். வேலிடிட்டியோ 360 நாட்கள் ஆகும்.

Reliance Jio Long Term Packs : வோடபோன், ஏர்டெலுக்கு நிகரான வளர்ச்சியை எட்டியுள்ள ஜியோ தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் சிறப்பான திட்டங்களை தருவதில் துளியும் தயங்கியதே கிடையாது. மாத மாதம் போன் பில் கட்டி போர் அடித்து போனவர்களுக்காகவே சிறப்பான பல பேக்குகளை கொடுத்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். அவ்வகையில் ஜியோ தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள பல்வேறு லாங்க் டெர்ம் ப்ரீபெய்ட் திட்டங்களை என்னென்ன என்பதை  இதில் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.  இந்த திட்டத்தில் உங்களுக்கு தேவையான திட்டத்தினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜியோ ரூ. 999 ப்ரீபெய்ட் திட்டம்

இந்த திட்டத்தில் ஜியோ 60 ஜிபி டேட்டாவை வழங்குகிறாது. 64 KBPS என்ற வேகத்தில் 4ஜி டேட்டாவை வழங்குகிறது இந்த பேக். நாள் ஒன்றுக்கு உங்களால் 100 எஸ்.எம்.எஸ்களை அனுப்பிக் கொள்ள இயலும்.  இந்த பேக்கின் வேலிடிட்டி 90 நாட்களாகும்.

ரூ. 1,999 ஜியோ ப்ரீபெய்ட் திட்டம்

125 ஜிபி டேட்டாவை தருகிறது இந்த திட்டம். இதன் வேலிடிட்டி 180 நாட்களாகும். நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்.களை நீங்கள் அனுப்பிக் கொள்ளல்லாம். 4ஜி டேட்டாவை 64 Kbps என்ற வேகத்தில் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு வருடத்திற்கான பேக்

360 நாட்கள் வேலிடிட்டி பேக் இதுவாகும். நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்.களை நீங்கள் அனுப்பிக் கொள்ளல்லாம். 4ஜி டேட்டாவை 64 Kbps என்ற வேகத்தில் நீங்கள் பெற்றுக் கொள்ள இயலும். இலவச உள்ளூர், வெளியூர் கால்கள் பேசிக் கொள்ள இயலும். 350 ஜிபி டேட்டாவை இது பெற்றுள்ளது.

மேலும் படிக்க : ரூ. 1.5 லட்சத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறதா சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close