Advertisment

1 வருட வேலிடிட்டி; ஒரு நாளில் 24ஜிபி டேட்டா: ஜியோவின் இந்த பேக் பற்றி தெரியுமா?

ஜியோவின் அதிக நாட்கள் வேலிடிட்டி திட்டத்தில் ஒட்டுமொத்தமாக 24ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதை ஒரு வருடம் முழுவதும் அல்லது 1 நாளில் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

author-image
WebDesk
New Update
Reliance Jio

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக ஜியோ உள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப விலை, வேலிடிட்டிக்கு ஏற்றார் போல் திட்டங்களை வழங்குகிறது. அந்த வகையில் அதிக நாட்கள்  வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் திட்டத்தில் சற்று குறைந்த விலையில் ஜியோ ஒரு திட்டத்தை வழங்குகிறது.

Advertisment

அதில் ஒட்டுமொத்தமாக 24ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதை ஒரு வருடம் முழுவதும் அல்லது 1 நாளில் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். ஜியோவின் ரூ.1559 திட்டம் பற்றி பார்ப்போம்.

ரூ.1559 ப்ரீபெய்ட் திட்டம் 

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.1559 திட்டமானது 24ஜிபி மொத்த டேட்டாவுடன் வருகிறது. இது ஒரே நாளில் முழுமையாகப் பயன்படுத்தலாம் அல்லது 1 வருட முழுவதும் வைத்தும் பயன்படுத்தலாம். தேவைப்பட்டால், கூடுதல் டேட்டாவைப் பெற, டேட்டா ப்ரீபெய்டு வவுச்சர்கள் மூலம் எப்போதும் ரீசார்ஜ் செய்யலாம். 

இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், 100 எஸ்எம்எஸ்/நாள் ஆகியவை பெறலாம். JioCloud, JioTV மற்றும் JioCinema போன்றவையும் கூடுதலாகப் பெறலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 336 நாட்கள் ஆகும். 

இது திட்டம் ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி திட்டத்தில் பொருந்துவதால் உங்கள் ஏரியாவில் 5ஜி கிடைக்கும் என்றால் இதைப் பயன்படுத்திக்கலாம். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Jio Recharge Plan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment