ரிலையன்ஸ் ஜியோவில் ரூ.149க்கு தினம் 1ஜிபி இன்டர்நெட்

இத்துடன் ரூ.149 மற்றும் ரூ.198 திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவை முறையே தினமும் 1 ஜிபி மற்றும் 1.5 ஜிபி டேட்டா வழங்குகின்றன

2018 புது வருடத்தை முன்னிட்டு 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.199 மற்றும் ரூ.299 விலையில் இரண்டு திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. இவை வாடிக்கையாளர்களுக்கு முறையே தினமும் 1.2 ஜிபி மற்றும் 2 ஜிபி டேட்டா வழங்குகின்றன.

இத்துடன் ரூ.149 மற்றும் ரூ.198 திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவை முறையே தினமும் 1 ஜிபி மற்றும் 1.5 ஜிபி டேட்டா வழங்குகின்றன. இவற்றின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். பழைய வேலிடிட்டியுடன் கிடைக்கும் திட்டங்களில் ரூ.50 தள்ளுபடி செய்யப்பட்டு பழைய விலைக்கே வழங்கப்படுகின்றன.

ஜியோ ரூ.349, ரூ.399 மற்றும் ரூ.499 விலையில் முறையே தினமும் 70 ஜிபி, 84 ஜிபி மற்றும் 91 ஜிபி டேட்டாவை 70 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 91 நாட்களுக்கு முறையே வழங்குகின்றன. அனைத்து திட்டங்களிலும் தினமும் 1ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றன.

இதேபோல் ரூ.398, ரூ.448 மற்றும் ரூ.498 திட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு முறையே 105 ஜிபி, 126 ஜிபி மற்றும் 136 ஜிபி முறையே 70 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 91 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இவற்றில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஜியோ அறிவித்துள்ள புதிய மாற்றங்கள் ஜனவரி 9-ம் தேதி முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close