ரூ2,500- 3,000 விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்: இது ஜியோவை தவிர வேற யாரா இருக்கும்?

இந்தியாவில் திரும்பப்பெறக்கூடிய வைப்புத் தொகையாக 1,500 செலுத்தி, 4 ஜி மொபைல் போன்களை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் ஜியோதான்.

Reliance Jio Plans to release 5G mobiles at low price
Reliance Jio Plans to release 5G mobiles at low price

5G Smartphones at low price Tamil News: ரிலையன்ஸ் ஜியோ தன் 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.5,000-க்கும் குறைவாக அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. மேலும், படிப்படியாக ரூ.2,500-3,000-ஆக குறைக்கவும் திட்டமிட்டுள்ளது என்று நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போது 2ஜி இணைப்பைப் பயன்படுத்தும் 20-30 கோடி மொபைல் போன் பயனர்களை இந்நிறுவனம் குறிவைத்திருக்கிறது. “இந்த சாதனத்தை ரூ.5,000-க்கும் குறைவாகக் கொண்டு வர ஜியோ விரும்புகிறது. நாங்கள் விற்பனையை அதிகரிக்கும்போது, அதன் விலை ரூ.2,500-3,000 வரை இருக்கும்” என்று பெயர் வெளியிட விரும்பாத நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.

இதுபற்றி ரிலையன்ஸ் ஜியோவுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலுக்கு எந்த பதிலும் இல்லை. தற்போது, 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ரூ.27,000 முதல் விலை வரம்பில் கிடைக்கின்றன. இந்தியாவில் திரும்பப்பெறக்கூடிய வைப்புத் தொகையாக 1,500 செலுத்தி, 4 ஜி மொபைல் போன்களை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் ஜியோதான். 43வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி “2G-mukt” (2 ஜி இணைப்புகள் இல்லாத) இந்தியாவை உருவாக்குவதாக உறுதியளித்ததோடு மலிவு ஸ்மார்ட்போன் பயன்பாட்டில், 350 மில்லியன் இந்தியர்கள் (தற்போது 2 ஜி அம்ச தொலைபேசியைப் பயன்படுத்துபவர்கள்) மாறுவதற்குத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

ஜியோ இயங்குதளங்களில் 7.7 சதவிகித பங்குகளுக்கு கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு செய்ததை அறிவித்த அம்பானி, மேலும் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஸ்மார்ட்போன் இயக்க முறைமையை உருவாக்க அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் ஜியோ கூட்டு சேரும் என்றும் கூறினார்.

இந்நிறுவனம் தனது சொந்த 5 ஜி நெட்வொர்க் கருவிகளிலும் பணியாற்றி வருகிறது. மேலும், இந்த தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பு, சோதனைக்காக ஸ்பெக்ட்ரம் ஒதுக்குமாறு டெலிகாம் துறையைக் கேட்டுக் கொண்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் கோரிக்கைக்கு அரசாங்கம் இன்னும் செவிசாய்க்கவில்லை.

தற்போது, இந்தியாவில் 5 ஜி சேவைகள் இல்லை. அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்திற்கான உள்நாட்டுச் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கள சோதனைகளை நடத்துவதற்காகத் தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களுக்கு அரசாங்கம் ஸ்பெக்ட்ரம் கூட ஒதுக்கவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Reliance jio plans to sell 5g smartphones at 2500 rupees price tamil news

Exit mobile version