Advertisment

ஜியோ அதிரடியை கவனிச்சீங்களா? எல்லா வாய்ஸ் அழைப்புகளும் இலவசம்

Reliance Jio removes IUC charges ஜியோ மீண்டும் அனைத்து ஆஃப்-நெட் உள்நாட்டு வாய்ஸ் அழைப்புகளையும் 2021 ஜனவரி 1 முதல் இலவசமாக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Reliance Jio removes IUC charges Free voice calls from Jan 1 2021 tamil news

Reliance Jio Free voice calls from Jan 1 2021

Reliance Jio Free voice calls from Jan 1 2021 Tamil News : ஜனவரி 1, 2021 முதல் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் இலவச வாய்ஸ் அழைப்புகளை வழங்குவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. இந்தத் தொலைதொடர்பு நிறுவனமானது இறுதியாக இன்டர்கனெக்ட் பயன்பாட்டுக் கட்டணங்களை (ஐ.யூ.சி) நீக்கியுள்ளது. அதாவது, ஜியோ பயனர்கள் இப்போது ஐ.யூ.சி நிமிடங்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. 2019-ம் ஆண்டின் இறுதியில் ஐ.யூ.சி நிமிடங்களுடன் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை ஜியோ அறிமுகப்படுத்தியது. Adjusted Gross Revenue (AGR) வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கிய பின்னர் ஐ.யூ.சி நிமிடங்கள் என்ற கருத்து சேர்க்கப்பட்டது.

Advertisment

இப்போது ட்ராய் 2021 ஜனவரி 1 முதல், நாட்டில் ‘பில் அண்ட் கீப்’ ஆட்சியை அமல்படுத்தவுள்ளது. இது அனைத்து உள்நாட்டு வாய்ஸ் அழைப்புகளுக்கு ஐ.யூ.சியை தடை செய்யும். "ஐ.யூ.சி கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டு ஆஃப்-நெட் உள்நாட்டு வாய்ஸ் அழைப்பு கட்டணங்களைப் பூஜ்ஜியமாக மாற்றுவதற்கான உறுதி நிறைவேற்றியவுடன், ஜியோ மீண்டும் அனைத்து ஆஃப்-நெட் உள்நாட்டு வாய்ஸ் அழைப்புகளையும் 2021 ஜனவரி 1 முதல் இலவசமாக்கும். ஆன்-நெட் உள்நாட்டு வாய்ஸ் அழைப்புகள் எப்போதும் ஜியோ நெட்வொர்க்கில் இலவசமாக இருக்கும்" என்று நிறுவனம் கூறியது.

செப்டம்பர் 2019-ன் பில் & கீப் முறையை, ட்ராய் 2020 ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகும் அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்தபோது, ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ஆஃப்-நெட் வாய்ஸ் அழைப்புகளுக்குக் கட்டணம் வசூலிக்கத் தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை. அவ்வாறு செய்யும்போது, ட்ராய் ஐ.யூ.சி கட்டணங்களை ரத்து செய்யும் காலம் வரை மட்டுமே இந்த கட்டணம் தொடரும் என்று ஜியோ தனது பயனர்களுக்கு உறுதியளித்தது. இன்று, ஜியோ அந்த வாக்குறுதியை நிறைவேற்றி, ஆஃப்-நெட் வாய்ஸ் அழைப்புகளை மீண்டும் இலவசமாக்கியுள்ளது” என ஜியோ கூறுகிறது. மேலும், புத்தாண்டு ஜியோ இலவச வாய்ஸ் அழைப்புகள் மற்றும் அன்லிமிடெட் தரவுகளுடன் திட்டமிடுகிறது.

2021 புத்தாண்டு தினத்தன்று, ஜியோ சில அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுள்ளது. ரூ.129 ஜியோ ரீசார்ஜ் திட்டம் 2 ஜிபி டேட்டா மற்றும் எந்த நெட்வொர்க்குக்கும் இலவச வாய்ஸ் அழைப்புகளை 28 நாட்களுக்கு வழங்குகிறது. ரூ.149 ப்ரீபெய்ட் ஜியோ திட்டம், அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவச வாய்ஸ் அழைப்புகளுடன் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவை வழங்கும். இது 24 நாட்களுக்கு செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது.

ரூ.199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமும் உள்ளது. இது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்களுக்கு இலவச வாய்ஸ் அழைப்பு சலுகைகளுடன் வருகிறது. 84 நாள் திட்டத்தையும் ஜியோ வழங்கவுள்ளது. இதன் விலை ரூ.555. இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் இந்தியாவுக்குள் எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகளும் இருக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Jio
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment