/tamil-ie/media/media_files/uploads/2021/06/Reliance-Jio-Reuters.jpeg)
Reliance Jio Rs 98 Recharge plan returns with reduced validity Tamil News
Reliance Jio Rs 98 Recharge plan returns with reduced validity Tamil News : ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்காக ரூ.98 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரூ.98 ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம், ஒரு வருடம் இல்லாத நிலையில் மீண்டும் வந்துள்ளது. ஆனால், இப்போது குறைந்த செல்லுபடியாகும் காலத்துடன் வந்திருக்கிறது. 28 நாட்களுக்கு பதிலாக, இந்தத் திட்டம் ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 14 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
ரூ.98 திட்டம் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா பிரிவில் ஜியோவின் மலிவான ஆல் இன் ஒன் திட்டமாகவும் 4 ஜி டேட்டாவுடன் அன்லிமிடெட் அழைப்பைக் கொண்டுவரும். 300 எஸ்எம்எஸ் செய்திகளின் பயனுடன் ரூ.98 திட்டத்தை டெல்கோ திருத்திய சில மாதங்களிலேயே இந்த திட்டம் கடந்த 2020 மே மாதம் நிறுத்தப்பட்டது.
ரூ.98 திட்டம்: உங்களுக்கு என்ன கிடைக்கும், எப்படி ரீசார்ஜ் செய்வது
புதிய ரூ.98 டேட்டா திட்டம் மொத்தம் 21 ஜிபி டேட்டாவை ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. 14 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த பேக், ஜியோவிலிருந்து ஜியோ எண்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகளையும், ஜியோ ஆப்ஸின் சந்தாவையும் வழங்குகிறது. இதில், JioTV, JioCinema, JioNews, JioSecurity மற்றும் JioCloud ஆகியவை அடங்கும்.
/tamil-ie/media/media_files/uploads/2021/06/WhatsApp-Image-2021-05-31-at-7.42.01-PM.jpg)
ரீசார்ஜ் செய்ய ஆர்வமுள்ள பயனர்கள் ரூ.98 திட்டத்தை Jio.com வலைத்தளத்திலிருந்து வாங்கலாம். இந்த திட்டம் மைஜியோ பயன்பாடு மற்றும் கூகுள் பே மற்றும் பேடிஎம் போன்ற மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மூலமாகவும் கிடைக்கிறது. ஜியோ சமீபத்தில் 300 நிமிட இலவச அழைப்பு மற்றும் அதன் ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு ஒன்று வாங்கினால் மற்றொரு ரீசார்ஜ் சலுகை போன்ற பிற சலுகைகளையும் வழங்கியது.
கூகுள் மற்றும் ஜியோ, மலிவு ஸ்மார்ட்போனில் வேலை செய்கின்றன
மற்ற செய்திகளில், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சமீபத்தில் கூகிள் I/O 2021-ல் கூகுள் ஒரு மலிவான ஸ்மார்ட்போனை தயாரிப்பதில் ஜியோவுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக வெளிப்படுத்தினார். ஜியோ பிளாட்ஃபார்ம்களில் 7.7 சதவீத பங்குகளை கூகுள் கடந்த ஆண்டு ரூ.33,737 கோடிக்கு வாங்கியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.