Reliance Jio Rs499 Prepaid plan benefits validity happy new year offer Tamil News மீண்டும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்.. இதில் புதுசு என்ன? | Indian Express Tamil

மீண்டும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்.. இதில் புதுசு என்ன?

Reliance Jio Rs499 Prepaid plan benefits validity happy new year offer Tamil News இந்த ஆண்டு ஜனவரி 7 வரை செல்லுபடியாகும் மற்றும் அந்த தேதிக்குள் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் கூடுதல் பலன்களைப் பெற முடியும்.

Reliance Jio Rs499 Prepaid plan benefits validity happy new year offer Tamil News
Reliance Jio Rs499 Prepaid plan benefits validity happy new year offer Tamil News

Reliance Jio Rs499 Prepaid plan benefits validity happy new year offer Tamil News : ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிற முக்கிய டெலிகாம் ஆபரேட்டர்கள் வழங்கும் பல திட்டங்கள், சில வாரங்களுக்கு முன்பு விலை உயர்வைக் கண்டன. இதனால், சில பிரபலமான திட்டங்கள் நிறுத்தப்பட்டன அல்லது புதிய குறைக்கப்பட்ட சலுகைகளுடன் வழங்கப்படுகின்றன.

இன்று ரிலையன்ஸ் ஜியோ, 2ஜிபி தினசரி டேட்டா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுகல் போன்ற புதிய நன்மைகளுடன் பிரபலமான ரூ.499 திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தைப் பற்றிய அனைத்து விவரங்களும் இதோ.

ஜியோ ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் : அதன் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி

ரூ.499 திட்டமானது இப்போது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும், வரம்புக்குப் பிறகு பயனர்கள், குறைக்கப்பட்ட டேட்டா வேகமான 64கேபிபிஎஸ் வேகத்தில் பயன்படுத்த முடியும். இந்த திட்டம் இப்போது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் ஜியோ டு ஜியோ மற்றும் ஜியோ டு ஜியோ அல்லாத வாய்ஸ் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பிரைம் மெம்பர்ஷிப் ஆகியவற்றை வழங்கும்.

ரூ.499 திட்டமானது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் வருகிறது. இது கூடுதல் கட்டணமின்றி இந்த பிளாட்ஃபார்மிற்கு ஒரு வருட அணுகலை வழங்குகிறது. JioCinemaa மற்றும் JioTV போன்ற Jio பயன்பாடுகளுக்கான அணுகல் மற்ற நன்மைகளில் அடங்கும்.

புத்தாண்டு வாழ்த்துச் சலுகையை ஜியோ நீட்டித்துள்ளது

ரிலையன்ஸ் ஜியோ, ஆண்டு ரூ.2,545 திட்டத்தில் புதிய ஹேப்பி நியூ இயர் சலுகைக்கான கால அளவை ஆபரேட்டர் அதிகரித்து வருவதாகவும் அறிவித்தது. முன்னதாக இந்த சலுகை ஜனவரி 2 வரை மட்டுமே இருந்த நிலையில், இப்போது இந்த ஆண்டு ஜனவரி 7 வரை செல்லுபடியாகும் மற்றும் அந்த தேதிக்குள் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் கூடுதல் பலன்களைப் பெற முடியும்.

ரூ.2,545 திட்டம் அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 336 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கும் வருடாந்திர திட்டமாகும். இருப்பினும், புதிய ஹேப்பி நியூ இயர் சலுகையுடன், இந்தத் திட்டம் இப்போது 29 நாட்களுக்குக் கூடுதல் செல்லுபடியாகும். இது வழக்கமான 336 நாட்களுக்குப் பதிலாக முழு 365 நாட்களுக்குச் செயல்படுத்துகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Reliance jio rs499 prepaid plan benefits validity happy new year offer tamil news