Reliance Jio Tamil News, Complimentary Plans Tech News: ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் Vi ஆகியவைதான் இந்தியாவின் முதல் மூன்று தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள். இவை அனைத்தும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களில் ஒரேபோன்ற நன்மைகளுடன் ஏறத்தாழ ஒரேபோன்ற விலையில் வழங்குகின்றன. ஒவ்வொரு நிறுவனத்தின் திட்டங்களை வேறுபடுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க, நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜீ5 போன்ற OTT சேவைகளுக்குச் சந்தாக்களை வழங்குகிறார்கள். ஏர்டெல், ஜியோ மற்றும் Vi வழங்கும் அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ தன் அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களுடனும், ஜியோ டிவி உள்ளிட்ட அதன் சொந்த ஆன்லைன் தொகுப்புகளின் சந்தாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இது தவிர, ரூ.401, ரூ 499, ரூ.588, ரூ.777 மற்றும் ரூ.2,599 திட்டங்களுடன் ஒரு வருடத்திற்கான டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவையும் வழங்குகிறது. மேலும், ரூ.612, ரூ.1,004, ரூ.1,206 மற்றும் ரூ.1,208 ஆட்-ஆன் (add-on) பேக்குகளும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் சேர்க்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தினசரி ஐபிஎல் போட்டிகளை டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபியில் பார்க்கலாம்.
ரீசார்ஜ் செய்த 10 நிமிடங்களுக்குள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா, பயனர் மொபைல் எண்ணில் செயல்படுத்தப்படும்.
ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம் வழங்க வேண்டிய அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களும் இந்நிறுவனத்தின் சொந்த எக்ஸ்ட்ரீம் (Xstream) ஸ்ட்ரீமிங் சேவை மற்றும் விங்க் மியூசிக் சேவைகளுடன் தொகுக்கப்பட்டுள்ளன.
அதன் ரூ.401, ரூ.448, ரூ.599 மற்றும் ரூ.2,698 திட்டங்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கான ஒரு வருடச் சந்தாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல, ரூ.349 திட்டம், அமேசான் பிரைம் வீடியோவின் 28 நாள் சந்தாவுடனும் ரூ.289 திட்டம், ஜீ5-வின் 28 நாள் சந்தாவுடனும் சேர்க்கப்பட்டுள்ளன.
Vi
Vi ப்ரீபெய்ட் ரீசார்ஜ்கள் அனைத்தும் Vi மூவிஸ் மற்றும் டிவி செயலிகளுக்கான சந்தாவுடன் வருகின்றன. மேலும், அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.405, ரூ.595, ரூ.795 மற்றும் ரூ.2,595 ரீசார்ஜ் திட்டங்களுடன் ஜீ5-க்கு ஒரு வருடச் சந்தாவையும் வழங்குகிறது. வாடிக்கையாளர்கள், Vi மூவிஸ் மற்றும் டிவி செயலிகள் மூலம் சந்தாவை செயல்படுத்தலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"