Reliance Jio vs Airtel vs Vodafone New Prepaid Plans : ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் கிட்டத்தட்ட 50% கட்டணங்களை உயர்த்தி தங்களின் புதிய ப்ளான்களை வெளியிட்டுள்ளனர். இந்த புதிய கட்டணங்களால் மக்கள் பெரும் அளவு அதிச்சி அடைந்துள்ளனர். ஃபேர் யூசேஜ் பாலிசி மற்றும் இண்டெர்கனெக்ட் யூசேஜ் சார்ஜஸ் ஆகியவற்றில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்து புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யபட்டுள்ளது.
Airtel new prepaid recharge plans
அன்லிமிட்டட் கால் வசதிகள் கொண்ட அனைத்து ப்ளான்களையும் மாற்றிவிட்டது ஏர்டெல் நிறுவனம். ஏர்டெல் தரும் குறிப்பிட்ட நிமிடங்களுக்கு மேல் மற்றொரு நெட்வொர்க்கில் இருக்கும் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினால் ஒரு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளது ஏர்டெல் நிறுவனம்.
ஏர்டெல் 19 ரூபாய் திட்டம் அன்லிமிடட் போன் கால்கள் செய்து கொள்ளலாம். 150 எம்.பி. டேட்டா வழங்கப்படும். 100 இலவச எஸ்.எம்.எஸ்கள். 2 நாட்கள் வேலிடிட்டி
ஏர்டெல் 49 ரூபாய் திட்டம் : 38.52 டாக் டைம், 100 எம்.பி. டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டி
ஏர்டெல் 79 ரூபாய் திட்டம் : டாக்டைம் ரூ. 63.95, டேட்டா : 200 எம்.பி., வேலிடிட்டி 28 நாட்கள்
ஏர்டெல் ரூ. 129க்கு வழங்கிய திட்டத்தை தற்போது ரூ. 148க்கு வழங்கி வருகிறது. அன்லிமிட்டட் கால்கள், 300 எஸ்.எம்.எஸ்கள், 2ஜிபி டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டி
ரூ. 248 திட்டம் : தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள திட்டம் இதுவாகும். 100 எஸ்.எம்.எஸ்கள் ஒரு நாளைக்கு அனுப்ப இயலும். 1.5ஜிபி டேட்டாவை ஒரு நாளைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். வேலிடிட்டி 28 நாட்களாகும்.
ரூ. 298 திட்டம் : 100 எஸ்.எம்.எஸ்கள் ஒரு நாளைக்கு அனுப்ப இயலும். 2 ஜிபி டேட்டாவை ஒரு நாளைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். வேலிடிட்டி 28 நாட்களாகும்.
ரூ. 598 மற்றும் ரூ. 698 திட்டங்கள்
82 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய திட்டங்களை ரூ. 448 மற்றும் ரூ.499க்கு வழங்கி வந்தது ஏர்டெல் நிறுவனம். தற்போது அவை அனைத்தையும் மொத்தமாக மாற்றி ரூ. 598 மற்றும் ரூ. 698க்கு புதிய திட்டங்களை வழங்கி வருகிறது ஏர்டெல் நிறுவன்ம், ஆனால் இதன் வேலிடிட்டி 84 நாட்களாகும். ஃபேர் யூசேஜ் பாலிசி லிமிட்டுகளுடன் வருகிறது இந்த ப்ளான்கள். ரூ, 598 ப்ரீபெய்ட் ப்ளானில் 1.5ஜிபி டேட்டா ஒரு நாளைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ரூ.698 ப்ரீபெய்ட் ப்ளானில் 2ஜிபி டேட்டா ஒரு நாளைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் படிக்க : ஏர்டெல் வாடிக்கையாளர்களே…. புதிய கட்டண விகிதம் இதுதான்
Vodafone Idea new recharge plans
வோடஃபோன் வழங்கும் புதிய ப்ளான்களில் ரூ.35 மற்றும் ரூ. 79 ப்ளான்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ. 35க்கான திட்டத்தில் ரூ. 38 டாக் டைம் பெற்றுக் கொள்ளலாம். அதே போன்று 100 எம்.பி. டேட்டா, 2.5 பைசா/நொடி டேரிஃப், வேலிடிட்டி 28 நாட்கள்
ரூ. 79க்கான திட்டம் : டாக்டைம் ரூ. 64, 200 எம்.பி. டேட்டா, ஒரு நொடிக்கு 1 பைசா, வேலிடிட்டி - 28 நாட்கள்
ரூ .149 திட்டம்: வோடபோன் ஐடியா ரூ 149 திட்டம் அன்லிமிட்டட் கால்கள், (ஆஃப்-நெட் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள் எஃப்யூபி), 2 ஜிபி டேட்டா, மற்றும் 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதிகளை வழங்குகிறது.
ரூ .249 திட்டம்: வோடபோன் ஐடியா ரூ 198 ரீசார்ஜ் திட்டத்தின் விலையை உயர்த்தி இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அன்லிமிட்டட் காலிங் வசதியை வழங்குகிறது (ஆஃப்-நெட் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்களின் எஃப்யூபி), நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா , 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும்.
ரூ .299 திட்டம்: ரூ .299 ப்ரீபெய்ட் திட்டத்தில் 2 ஜிபி டேட்டா, ஆஃப்-நெட் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட எஃப்யூபியுடன் அன்லிமிட்டட் கால்கள், 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் அனுப்பிக் கொள்ளலாம்.
ரூ 379 திட்டம்: ரூ 379 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிட்டட் கால் செய்யும் வசதியை வழங்குகிறது. ஆஃப்-நெட் அழைப்புகளுக்கு 3000 நிமிடங்கள் எஃப்யூபி உடன் வருகிறது. இந்த திட்டம் 1000 எஸ்எம்எஸ் உடன் மொத்தம் 6 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. வேலிடிட்டி 84 நாள்.
ரூ. 599 திட்டம்: வோடபோன் ஐடியாவின் ரூ 458 ப்ரீபெய்ட் திட்டம் இப்போது மாற்றப்பட்டுள்ளது, இப்போது இது ரூ .599 க்கு வரும். இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. ஆனால் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் அனுப்பிக் கொள்ளலாம்.
ரூ .699 திட்டம்: வோடபோன் ஐடியாவின் ப்ரீபெய்ட் திட்டம் ரூ. 699 ஆஃப்-நெட் அழைப்புகள், 2 ஜிபி தினசரி டேட்டா, 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுக்கு 3000 நிமிடங்கள் எஃப்யூபியுடன் அன்லிமிட்டட் சலுகைகளை வழங்குகிறது.
ஜியோ
ஆல் - இன் - ப்ளான்களை அறிமுகம் செய்யும் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 40% கட்டண உயர்வு என்று அறிவித்துள்ளதால் ரூ. 149க்கு ஆரம்பமாகும் திட்டங்கள் எல்லாம் இனி ரூ. 200க்கு ஆரம்பமாகலாம். இது தொடர்பான முழுமையான தகவல்கள் டிசம்பர் 6ம் தேதி மட்டுமே நமக்கு தெரிய வரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.