Reliance Jio Wi-Fi Calling : ஏர்டெல் நிறுவனம் தான் இந்தியாவில் முதன்முறையாக வைஃபை கால் சேவைகளை அறிமுகம் செய்தது. ஆனால் அது அனைத்து நெட்-வொர்க்குகளுக்கும் இல்லாமல் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ராட்பேண்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கால் செய்ய முடியும். ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து தற்போது ஜியோ நிறுவனமும் வைஃபை கால்களை அறிமுகம் செய்துள்ளது.
ஆடியோ, வீடியோ வைஃபை கால்களை நீங்கள் செய்து கொள்ள இயலும். வெகுநாட்களாக ஆராய்ச்சியில் இருந்து வந்த ஜியோ வைஃபை கால்கள் முதலில் சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்தியா முழுவதும் இந்த சேவைகளை பெற்றிட இயலும். 7ம் தேதி முதல் 16ம் தேதி வரை கொஞ்சம் கொஞ்சமாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
To read this article in English
ஜியோ நிறுவனம் வழங்கும் இந்த சேவைகள் மூலம் சுமார் 155 ஸ்மார்ட்போன்களில் வைஃபை கால்கள் பேசிக் கொள்ள இயலும். ஆனால் ஏர்டெல் மூலம் வெறும் 25 ஸ்மார்ட்போன்களில் மட்டுமே பேச இயலும். ஏர்டெல் நிறுவனம் வாய்ஸ் வைஃபை கால் சேவையை மட்டுமே அறிமுகம் செய்துள்ளது. ஆனால் ஜியோ நிறுவனம் வாய்ஸூடன் கூடிய வீடியோ வைஃபை கால்களையும் அறிமுகம் செய்துள்ளது.
WiFi call - என்றால் என்ன?
நெட்வொர் சேவைகள் மிகவும் குறைவாக கிடைக்கின்ற பகுதிகளிலும் கூட வைஃபை நெட்வொர்க் மூலமாக வாடிக்கையாளர்கள் வைஃபை கால்களை பேசிக் கொள்ள இயலும். ஒரு நிமிடம் வைஃபை காலில் பேசும் போது அரை எம்.பிக்கும் குறைவான டேட்டாவே செலவாகும். அதனால் நீங்கள் உங்கள் டேட்டாவை எப்படி தீர்ப்பது என்ற கவலை கொள்ளாமல் இருக்கலாம். ஜியோ நெட்வொர்க்கில், வைஃபை கால்கள் செய்ய முடியும் வகையில் ஸ்மார்ட்போன்களை கொண்டிருக்கும் அனைவரும் வைஃபை கால்களில் போன் பேசிக்கொள்ளலாம்.
வைஃபை கால் செய்ய உங்களுக்கு என்ன தேவை?
முதலில் வைஃபை கால்கள் செய்ய இயலும் ஸ்மார்ட்போன்களை பெற்றிருக்கின்றோமா என்று செக் செய்யுங்கள். பிறகு வைஃபை காலிங் ஃபீச்சரை ஆன் செய்து வையுங்கள். அப்போது வைஃபை நெட்வொர்க்குடன் உங்கள் எண்ணை கனெக்ட் செய்ய கூறும். இது முடிந்தவுடன் நீங்கள் வைஃபை கால்களை செய்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் ஜியோ எண், ஒரு ப்ரோட்பேண்ட் கனெக்சன் மற்றும் ஸ்மார்ட்போன் வைத்திருந்தால் போதும். இதற்கு எந்தவிதமான கட்டணமும் உங்களிடம் இருந்து தனியாக வசூலிக்கப்படாது. சர்வதேச அழைப்புகளுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஜியோ அறிவித்துள்ளது.