ஜியோ ஜிகாஃபைபர் : பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ஜியோ நிறுவனத்தின் ஜியோ ஜிகா ஃபைபர் பிரான்ட்பேன்ட் சேவையின் முன்பதிவு இன்று (15.8.18) முதல் தொடங்குகிறது.
ஜியோ ஜிகாஃபைபர் முன்பதிவு:
டெலிகாம் சந்தையை கலங்கடித்துக் கொண்டிருக்கும் ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் தனது அடுத்த வேட்டையான ஃபைபர் சார்ந்த ஹோம் பிராட்பேன்ட் சேவைகள் குறித்த அறிவிப்பை நடந்து முடிந்த வருடாந்திர பொதுக் கூட்டத்தில் வெளியிட்டது.
ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைகள் விலை மாதம் ரூ.500 முதல் ரூ.700 முதல் துவங்கும் என்றும் குறைந்தபட்சம் 100 ஜிபி டேட்டா, 100Mbps வேகத்தில் வழங்கப்படும் என்றும், பிராட்பேன்ட் சேவையுடன் இன்டர்நெட் டிவி மற்றும் வீடியோ காலிங் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் ஜிகாஃபைபர் குறித்த எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்களிடம் இரட்டிபானது. மேலும், ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைகள் நவம்பர் மாதம் முதல் இந்தியாவின் 15 முதல் 20 நகரங்களில் துவங்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.
ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர்
ஜிகாஃபைபர் வாங்குவதற்கான முன்பதிவியில் கிடைக்கும் வரவேற்பை வைத்து நகரங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதுக்குறித்து பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி ,1100 நகரங்களில் சுமார் 5 கோடி வீடுகளுக்கு பிராட்பேன்ட் சேவைகளை வழங்க ஜியோ திட்டமிட்டு இருப்பதாக கூறினார்.
எப்படி முன்பதிவு செய்ய வேண்டும்?
இந்நிலையில், இன்று (15.8.18) முதல் ஜியோ ஜிகா ஃபைபர் பிரான்ட்பேன்ட் சேவையின் முன்பதிவு ஆரம்பமாகிறது. ஆப்(Myjio app) அல்லது ஜியோ(jio.com) இணையதளத்தில் லாகின் செய்து பதிவு செய்துகொள்ளலாம்.
இதற்கான முன்பதிவு முற்றிலும் இலவசம். ஆன்லைனில் முன்பதிவு செய்ய gigafiber.jio.com. வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். அதில் உங்களின் பெயர், வீட்டின் முகவரி, அலுவலகத்தின் முகவரி, தொலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
பின்பு, உங்களின் மொபைல் எண்ணிற்கு வரும் otp எண்ணை பதிவு செய்து ஜியோ ஜிகா ஃபைபரை முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.