ஆகஸ்ட் 15ல் இருந்து தொடங்குகிறது ஜியோபோன் 2விற்கான முன்பதிவு

Reliance Jio Offer : எப்படி பதிவு செய்வது? விலை மற்றும் இதர சிறப்பம்சங்கள் குறித்த பார்வை

ஜியோபோன் 2 : ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதுவரவு தான் இந்த ஜியோ 4ஜி போன். ஆகஸ்ட் 15ம் தேதியில் சந்தைக்கு வர இருக்கிறது இந்த ஜியோபோன்.

இந்த போனின் அறிமுகம் பற்றி ரிலையஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொது சந்திப்பில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போனின் ஆரம்ப விலையே ரூ. 2999 என இருப்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றிருக்கிறது ஜியோபோன்.

பழைய கைபேசிகளில் இருக்கும் கீபோர்ட் டிசைனை இந்த போனிலும் பயன்படுத்தி உள்ளனர். சென்ற வருடம் அறிமுகமான இந்த போன் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் ஜியோ 2ஐ அறிமுகம் செய்து வைத்திருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம்.

How to do order Reliance Jio Phone 2 online from Jio.com (இந்த போனை எப்படி இணையத்தில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்வது)

இந்த போனிற்கான முன்பதிவினை ஜியோ செயலியில் இருந்தே பதிவு செய்யலாம். மைஜியோ செயலை பதிவிறக்கம் செய்து அதில் ஜியோபோன் 2 என்ற பக்கத்தை கிளிக் செய்தால் அதில் கெட் நவ் என்ற ஒரு புதிய ஆப்சன் உருவாகும்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க 

அதில் உங்களின் தனிநபர் விபரங்களை பூர்த்தி செய்யச் சொல்லி ஒரு பாரம் தோன்றும். அதில் உங்களின் உங்களின் தகவலை பதிவு செய்து இந்த போனை – ஐ ஆர்டர் செய்து கொள்ளலாம்.

ரூ. 2,999ற்கு விற்பனையாகும் இந்த போனிற்கு சிஓடி ஆப்சன் கிடையாது. டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் வசதி மூலம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

ஜியோபோன் 2 சிறப்பம்சங்கள்

2.4 இன்ச் QVGA திரையுடன் வரும் இந்த போன் கை (KAI) என்ற இயங்கு தளத்தின் உதவியுடன் இயங்கி வருகிறது. 512 எம்.பி. RAM மற்றும் 4ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ்ஜுடன் வரும் இந்த போனில் மெமரி கார்டினை பயன்படுத்தி டேட்டாக்களை சேமித்துக் கொள்ளலாம்.

பேட்டரி திறன் 2,000mAh ஆகும். வாட்ஸ்ஆப், முகநூல், யூடியூப், கூகுள் மேப் போன்ற செயலிகளுடன் வர இருக்கிறது இந்த ஜியோபோன் 2.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close