Reliance JioPhone 2 Specifications : தனித் தேவைக்காக ஒரு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் அல்லது போன் வாங்க வேண்டும் என்றால் அதற்காக நாம் அதிகம் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. நாம் தேடும் அனைத்து வசதிகள் இருந்தாலும் சில நேரங்களில் அந்த ஸ்மார்ட்போனின்/போனின் விலையே நம்மை அதன் பக்கத்தில் இருந்து விலக்கி வைத்துவிடும் அளவிற்கு அவ்வளவு காஸ்ட்லியாக இருக்கும்.
ஜியோ நெட்வொர்க் வந்ததில் இருந்து இணைய சேவைக்காக நாம் அதிகம் செலவு செய்வதில்லை. அதை கணக்கில் கொண்டு தான் ஜியோ தற்போது தொடர்ச்சியாக குறைந்த விலையில் போன்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஜியோ போன் 1-ற்கு கிடைத்த வரவேற்பினைக் கண்டு ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ ஃபோன் 2வையும் அறிமுகம் செய்து வைத்துள்ளது.
Reliance JioPhone 2 Specifications
இந்த போன் ஜியோ சிம்கார்டில் மட்டுமே இயங்கும். வோடஃபோன், ஏர்டெல் போன்ற சிம்கார்டுகளை பயன்படுத்தினால் வேலை செய்யாது.
விருப்பப்படும் வாடிக்கையாளர்களுக்கு சிம்கார்டும் நேரடியாக வீட்டிற்கு டெலிவரி செய்யப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட பகுதியில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த வசதி.
ஜியோ போன்களுக்கே என்று பிரத்யேகமான ப்ரிபெய்ட் ப்ளான்கள் ஜியோ ஆப்பில் உள்ளது.
குறுகிய காலத்திற்கு என்றால் நீங்கள், ரூ.49, ரூ.99 மற்றும் ரூ.153க்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
பெரிய ஹாரிஜாண்டல் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. 2.4 இன்ச் டிஸ்பிளே சைஸ். கைஓ.எஸ். இயங்குதளத்தில் இயங்கி வருகிறது.
க்யூவெர்ட்டி கீபோர்ட் கொண்டுள்ளது.
512எம்.பி ரேம் மற்றும் 4ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. 128 ஜிபி வரையில் மெமரிகார்ட் மூலமாக டேட்டாவை சேமித்துக் கொள்ளலாம்.
2,000mAh பேட்டரி கொண்டுள்ளது.
மேலும் படிக்க : ரூ.4799க்கு ஒரு ஸ்மார்ட்போன்… திகைத்துப்போன ரெட்மி வாடிக்கையாளர்கள்
JioPhone 2 Price, sales and Offers
நேற்று (30/05/2019) மதியம் 12 மணியில் இருந்து ஜியோ இணையத்தில் ஃப்ளாஷ் சேலிற்காக வைக்கப்பட்டுள்ளது ஜியோ போன் 2. இதன் விலை 2,999 மட்டுமே. டெலிவரி சார்ஜ் 90 ரூபாய் . இந்த போனை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் 3,098 ரூபாயை கட்ட வேண்டும். மாதம் ரூ.141.71 பைசாவை நீங்கள் ஈ.எம்.ஐயாக கட்ட வேண்டும்.
பேடிஎம்மில் வாங்கினால் ரூ.200 தள்ளுபடியாக பெறலாம். உங்களின் கைக்கு இந்த போன் வந்து சேர 5 முதல் ஏழு நாட்கள் வரை ஆகும். கேஷ் ஆன் டெலிவரி வசதிகளும் உண்டு.
இந்த போனின் முதல் வெர்ஷனான ஜியோ போன் 1 2017ம் ஆண்டு வெளியானது. ஜியோபோன் 2வை கடந்த வருடம் அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ் தீபாவளி சேலுக்காக 1 வாரம் வரை விற்பனைக்கு வைத்திருந்தது.