குடும்பத்துடன் சேர்ந்து ஜியோ 2 போனை வெளியிட்ட அம்பானி!

ஹங்கமா சலுகையை பயன்படுத்தி ரூ.501 தொகையை செலுத்தி ஜியோ போன் 2-வை பெற்றுக் கொள்ள முடியும் என்பது கூடுதல் தகவல்.

மும்பையில் நடைப்பெற்ற 41 ஆவது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பொதுக்குழு கூட்டத்தில் ஜியோன் ஃபோன் 2 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் விற்பனைக்கும் வருகிறது.

41 ஆவது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பொதுக்குழுக் கூட்டம் மும்பையில் இன்று காலை நடைப்பெற்றது. கடந்த 3 ஆண்டுகளாக ரிலையன்ஸ் நிறுவனக்த்தின் பொதுக்குழு கூட்டம் ஒட்டு மொத்த மக்களின் கவனத்தையும் பெற்ற்]று வருகிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ரிலையன்ஸ் கூட்டத்தில் தான் முதன்முறையாக ஜியோ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

டெலிகாம் சேவையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஜியோவை சேவையைத் தொடர்ந்து சென்ற வருடம் வெறும் 1,500 ரூபாய்க்கு ஜியோ ஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இரண்டு அறிமுகங்களுக்கு பிறகு நடைப்பெற்ற 41 ஆவது பொதுக்குழு கூட்டத்தில் பொதுமக்களின் எதிர்பார்ப்பு இரட்டிபானது.

அந்த எதிர்ப்பார்ப்பை முழுமையாக நிறைவு செய்யும் வகையில் ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ2 ஃபோனை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்டார்.ஜியோ2 ஃபோனை அவரின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் இஷா அம்பானி ஆகியோர் வெளியிட்டனர்.

ரூ, 2999 விலை கொண்ட இந்த ஃபோன் கீபேடுடன் கூடிய அம்சத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முக்தல் ஜியோ2 ஃபோன் சந்தையில் விற்பனைக்கு வருகிறது. ஏற்கெனவே ஜியோ போனை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் புதிய போனை எக்சேஞ்ச் ஆபர் மூலம் மாற்றிக் கொள்ளமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் ஹங்கமா சலுகையை பயன்படுத்தி ரூ.501 தொகையை செலுத்தி ஜியோ போன் 2-வை பெற்றுக் கொள்ள முடியும் என்பது கூடுதல் தகவல்.

ஜியோ 3 போனின் சிறப்பம்சங்கள்:

1. 2.4 இஞ்ச் அளவில் QVGA டிஸ்பிளே

2. 512 MB ரேம்

3. 4GB மெமரி ஸ்டோரெஜ்

4.128 GB அளவிற்கு அதிகப்படுத்திக்கொள்ளும் MicroSD கார்டு வசதி

5. 2MP பின்புற கேமரா

6. VGA கொண்ட முன்பக்க கேமரா

7.2,000 mAh திறன் பேட்டரி

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Reliance jiophone 2 with full keypad launched price in india features sale

Next Story
இந்தியாவின் முதல் ஆட்டோமேட்டிக் வீல்சேர் – கோவை மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புWheel Chair
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com