ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பெரும் வரவேற்பு பெற்ற ஜியோ ஃபோனில் கூடிய விரைவில் வாட்ஸ் அப் சேவை வரவிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்ற வருடம், 4 ஜி வசதி கொண்ட ஃபீச்சர்போனை இலவசமாக வழங்குவதாக ஜியோ நிறுவனம் அறிவித்தது. இந்த அறிவிப்பு பின்பு, அந்த ஃபோன் குறித்த எதிர்ப்பார்ப்பு பொதுமக்களிடம் மேலூங்கியது. 4ஜி வோல்ட்இ சிறம்பம்சங்களை கொண்டிக்கும் இந்த ஜியோஃபோன், பயனுள்ளதாக இருக்குமா? ஃபோன் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஃபோனின் விலை எவ்வளவு இருக்கும்? இப்படி ஏகப்பட்ட கேள்விகள் மக்களிடம் இருந்தது.
அதன் பின்பு, ஒரு வழியாக கடந்த டிசம்பர் மாதம், ஜியோ ஃபோனின் புக்கிங் ஆரம்பமாகி பல்வேறு கட்டங்களை தாண்டி ஒரு வழியாக ஃபோனை பொதுமக்கள் வாங்கினார்கள். அதன் பின்பு தான் எல்லோருக்கும் தெரிந்தது 4ஜி ரக ஃபோனாக இருந்தாலும், இந்த ஃபீச்சர் ஃபோனில் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது என்று. அடுத்த கணமே பலரின் முகமும் சுருங்கியது.
இப்போது தான் பெரியவர்கள் முதல் எல்கேஜி பசங்க வரை எல்லோரும் வாட்ஸ் அப் பிரியர்கள் ஆயிற்றே என்ன செய்வது. இந்த நிலையில், தான் தற்போது ஜியோ நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கூடிய விரைவில் ஜியோ நிறுவனத்தின் ஃபீச்சர் ரக ஃபோனில் வாட்ஸ் சேசை உட்பட, ஃபேஸ்புக் மற்றும் ஹைக் போன்ற மெசேஜ் செயலிகளை தனியாக ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்துக் கொள்ளும் வசதியை கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தி, ஃபீச்ச்ர் ஃபோன் வாடிக்கையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஃபீச்சர் ரக ஃபோனிலியே அனைத்து சேவைகளும் கிடைத்துவிட்டால் மக்களின் நாட்டம் அதிகளவும் எந்த பக்கம் செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை.