UPI பணம் செலுத்தும் வசதியுடன், ஜியோவின் லேட்டஸ் 4ஜி போன் விலை ரூ.999-க்கு அறிமுகம் செய்யப்படும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
4ஜி இணைய வசதி கொண்ட இந்த போன் இந்தியாவில் 25 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இணைய வசதி வழங்கும் என்று ஜியோ கூறுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ இன்று 'ஜியோ பாரத்' என்ற இணைய வசதி கொண்ட புதிய செல்போனை வெளியிட்டது. ஸ்மார்ட்போன் வாங்க முடியாதவர்களை இலக்காகக் கொண்டு, நாடு முழுவதும் இன்னும் ஃபீச்சர் போன்களைப் பயன்படுத்தும் 25 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இணைய வசதியை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜியோ நிறுவனம் கூறுகிறது.
தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் குரல் சேவைகளின் விலையை அதிகரித்து, நிலைத்தன்மைக்காக போராடும் நேரத்தில் இந்த நடவடிக்கை வந்துள்ளது. ஜூலை 7 முதல் 65000 தாலுகாக்களில் 10 லட்சம் ஜியோ பாரத் ஃபோன்களுக்கான பீட்டா சோதனையைத் தொடங்கும் என்று ஜியோ கூறுகிறது. டெலிகாம் ஆபரேட்டர் புதிய ஜியோ பாரத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன் விலை ரூ. 123 மற்றும் 28 நாட்களுக்கு அளவில்லாத போன் அழைப்புகள் மற்றும் 500 எம்பி மொபைல் டேட்டாவை வழங்குகிறது. அதே திட்டத்தின் விலை ஆண்டுக்கு ரூ.1,234 ஆக நிர்ணயிக்கபட்டுள்ளது.
Google Pixel 7 இன் முதல் தகவல்: இந்த போனை கேமராவுடன் தொடங்குவோம். இதுமட்டுமில்லாமல், ஜியோ பாரத் போன்கள் JioPay உடன் UPI பணம் செலுத்துதல் வசதி இருக்கும். JioCinema மற்றும் JioSaavn வசதி இருக்கும். இந்த போன் கேமராவுடன் வருகிறது. ஆனால் ஜியோ இன்னும் அதைப் பற்றிய விவரங்களைப் பகிரவில்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"