/tamil-ie/media/media_files/uploads/2019/04/reliance-jio-7591111-1.jpg)
jio prepaid plans, jio offers
Reliance Jio New Prepaid Plans : புதிய, விலையுயர்த்தப்பட்ட கட்டணங்களுடன் கூடிய ஆல் - இன் - ஒன் ப்ளான்களை அறிமுகம் செய்த கையோடு ரூ. 98 மற்றும் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டங்களை கைவிடுவதாக அறிவித்திருந்தது ஜியோ நிறுவனம். ஆனால் தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த அந்த பேக்குக்ளை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம்.
ரூ. 98 ரிலையன்ஸ் ப்ரீபெய்ட் திட்டம்
28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பேக் மூலம் வாடிக்கையாளர்கள் 300 இலவச எஸ்.எம்.எஸ்களை அனுப்பிக் கொள்ளலாம்.
ஜியோவின் காம்ப்ளிமெண்ட்ரி ஆப்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஜியோ நெட்வொர்க்கில் இருக்கும் எந்த எண்ணிற்கும் இலவசமாக அலைத்து பேச இயலும். இதில் லிமிட்டட் ஃப்ரீ ஐ.யூ.சி நிமிடங்கள் கிடையாது.
2ஜிபி டேட்டாவை வழங்கும் இந்த பேக்கில் டேட்டா எக்ஸீட் ஆகும் போது 64Kbps என்ற வேகத்தில் இணையம் இயங்கும்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ. 148 ப்ரீபெய்ட் திட்டம்
இந்த திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் ஜியோ நெட்வொர்க்கில் அன்லிமிட்டட் கால்கள் பேசிக் கொள்ளலாம்.
300 இலவச நிமிடங்களில் இதர நெட்வொர்க்கை சேர்ந்த வாடிக்கையாளர்களுடன் பேசிக் கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்கள் அனுப்பிக் கொள்ள இயலும்.
ஜியோவின் இதர ஆப்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் வேலிடிட்டி 24 நாட்களாகும். இந்த திட்டங்கள் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் ப்ரீபெய்ட் ப்ளான்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க : Bharat Bond ETF: முதலீடு செய்ய விருப்பமா? இருக்கவே இருக்கு பாரத் பாண்ட் இ.டி.எஃப்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.