தர்பார் ரஜினி ஸ்டில் - டிரென்டிங்கில் மீண்டும் தாறுமாறு

Darbar Rajninkanth : போட்டோவை, ரஜினி ரசிகர்கள் படம் வெளியானதை போன்றே கொண்டாடி வருகின்றனர்.

தர்பார் புதிய ரஜினி ஸ்டில்லை, அவரது ரசிகர்கள் டுவிட்டரில் மீண்டும் டிரென்டிங் ஆக்கி கொண்டாடியுள்ளனர்.
காலா, பேட்ட படங்களை தொடர்ந்து, ரஜினிகாந்த் தற்போது ஏஆர். முருகதாஸ் இயக்கத்திலான தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வப்போது இந்த படத்தின் ஸ்டில்கள், இணையதளத்தில் வெளியாகிக்கொண்டும் உள்ளன.

இந்நிலையில், தர்பார் பட சூட்டிங்கில், இயக்குனர் ஏ,ஆர், முருதாஸ் உடன் ரஜினிகாந்த் உரையாடுவதாக ஒரு போட்டோவை, இயக்குனர் முருகதாஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த போட்டோவை, ரஜினி ரசிகர்கள் படம் வெளியானதை போன்றே கொண்டாடி வருகின்றனர். தேசிய அளவில் டுவிட்டரில் 10 மணிநேரத்திற்கும் மேலாக, தர்பார் என்று டிரென்டிங் ஆக்கி மகிழ்ந்தனர்.

லைகா புரொடக்சன் தயாரிப்பிலான தர்பார் படம், 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா, இந்தபடத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றிவருவதாக சமூகவைலதளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அனிரூத், இந்த படத்துக்கு இசையமைக்கிறார். அவர் தனது சமீபத்திய இன்டர்வியூவில் தெரிவித்துள்ளதாவது, இந்த படத்தில் ரஜினியின் அறிமுக பாடலை, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். தர்பார் படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா நவம்பர் அல்லது டிசம்பர் மாதவாக்கில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

Web Title:

Rajinikanth darbar nayanthara a r murugadoss darbar rajini

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close